திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் களப்புப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை.
சம்பூர் பொலிஸார் நேற்று (01) மாலை முற்றுகையிட்டு பெரும் தொகை கசிப்பை மீட்டுள்ளனர்.
சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவ் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது 32 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, 5 இலட்சத்தி 44 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, தோணி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.அத்தோடு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக 37,43,35 வயதுகளையுடைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளில் சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பூரில் பொலிஸ் சுற்றிவளைப்பு : மூன்று சந்தேக நபர்கள் கைது திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் களப்புப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை. சம்பூர் பொலிஸார் நேற்று (01) மாலை முற்றுகையிட்டு பெரும் தொகை கசிப்பை மீட்டுள்ளனர்.சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவ் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.இதன்போது 32 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, 5 இலட்சத்தி 44 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, தோணி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.அத்தோடு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக 37,43,35 வயதுகளையுடைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளில் சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.