• Nov 25 2024

ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!

Chithra / Aug 8th 2024, 3:10 pm
image

 

ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இரண்டாவது  நிலநடுக்கம் மியாசாகிக்கு வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும் அபாயம் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். 

ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை  ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன், இரண்டாவது  நிலநடுக்கம் மியாசாகிக்கு வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும் அபாயம் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement