• Nov 26 2024

பிரபாகரன் நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார் - நீதி அமைச்சர்..!samugammedia

mathuri / Jan 12th 2024, 7:15 am
image

சிறிதரன் எம்.பி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது அதனை கடுமையாக விமர்சித்த நிலையில்,  சீற்றமடைந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, முட்டாள்தனமான கருத்துக்களைக் கூற வேண்டாம் என்பதோடு  நீங்களே தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு." என்றும் கடுமையாக சாடினார்.

இதை தொடர்ந்து கருத்து தெரிவித்த சிறிதரன் எம்.பி.,

"முட்டாள்தனம் என்று அமைச்சர் தன்னைத்தானே முட்டாள் எனக் கூறுவதனை வரவேற்கின்றேன். பிரபாகரன் இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். 1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காலிமுகத்திடலில் தந்தை செல்வா ஜனநாயக வழி போராட்டத்தில் ஈடுபட்டபோது யார் அவரைத் தாக்கிக் கடலில் தூக்கிப் போட்டது?

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் சிங்களப் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க 154 விவசாயிகளைப்  படுகொலை செய்தது யார்? அப்போது தமிழர்கள் யாரும் ஆயுதம் ஏந்தவில்லை. தமிழர் பகுதியில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள் கண்ணை மூடிக் கொண்டா இருந்தீர்கள்? எம்மை முட்டாள் என்று குறிப்பிடும் நீதி அமைச்சரே முட்டாள். இந்த நாட்டில் உங்களின் இனவாதத்தால்தான் ஆயுதம் எம் மீது திணிக்கப்பட்டது. தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள்." - என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து மீண்டும் எழுந்த நீதி அமைச்சர்,

"சிறிதரன் எம்.பி. 1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூறினார். அப்போது நான் பிறக்கவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர் குறிப்பிடுகின்றார். அக்காலப்பகுதியில் எல்லைக்  கிராமங்களில் வாழ்ந்த சிங்களத் தாய்மார்கள் படுகொலை தென்பகுதியில் எத்தனை குண்டு வெடிப்புக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றவர்கள் நீங்கள். தலதா மாளிகையைக்கூட நீங்கள் விட்டு வைக்கவில்லை. இப்படி உங்களின் பல படுகொலைகளை எங்களினாலும் பட்டியலிட முடியும்.

இந்துத் தலைவர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் பிரபாகரன்  நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார். இராணுவத்தினர், எவரையும் படுகொலை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். 

பிரபாகரன் நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார் - நீதி அமைச்சர்.samugammedia சிறிதரன் எம்.பி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது அதனை கடுமையாக விமர்சித்த நிலையில்,  சீற்றமடைந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, முட்டாள்தனமான கருத்துக்களைக் கூற வேண்டாம் என்பதோடு  நீங்களே தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு." என்றும் கடுமையாக சாடினார்.இதை தொடர்ந்து கருத்து தெரிவித்த சிறிதரன் எம்.பி.,"முட்டாள்தனம் என்று அமைச்சர் தன்னைத்தானே முட்டாள் எனக் கூறுவதனை வரவேற்கின்றேன். பிரபாகரன் இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். 1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காலிமுகத்திடலில் தந்தை செல்வா ஜனநாயக வழி போராட்டத்தில் ஈடுபட்டபோது யார் அவரைத் தாக்கிக் கடலில் தூக்கிப் போட்டதுதிருகோணமலை - கந்தளாய் பகுதியில் சிங்களப் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்க 154 விவசாயிகளைப்  படுகொலை செய்தது யார் அப்போது தமிழர்கள் யாரும் ஆயுதம் ஏந்தவில்லை. தமிழர் பகுதியில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள் கண்ணை மூடிக் கொண்டா இருந்தீர்கள் எம்மை முட்டாள் என்று குறிப்பிடும் நீதி அமைச்சரே முட்டாள். இந்த நாட்டில் உங்களின் இனவாதத்தால்தான் ஆயுதம் எம் மீது திணிக்கப்பட்டது. தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள்." - என்று வலியுறுத்தினார்.இதனையடுத்து மீண்டும் எழுந்த நீதி அமைச்சர்,"சிறிதரன் எம்.பி. 1954 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூறினார். அப்போது நான் பிறக்கவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர் குறிப்பிடுகின்றார். அக்காலப்பகுதியில் எல்லைக்  கிராமங்களில் வாழ்ந்த சிங்களத் தாய்மார்கள் படுகொலை தென்பகுதியில் எத்தனை குண்டு வெடிப்புக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றவர்கள் நீங்கள். தலதா மாளிகையைக்கூட நீங்கள் விட்டு வைக்கவில்லை. இப்படி உங்களின் பல படுகொலைகளை எங்களினாலும் பட்டியலிட முடியும்.இந்துத் தலைவர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் பிரபாகரன்  நூற்றுக்கும் அதிகமான தமிழ்த் தலைவர்களைப் படுகொலை செய்தார். இராணுவத்தினர், எவரையும் படுகொலை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement