• May 19 2024

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் - பல சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி..! (முழு விபரம்)

Chithra / Nov 13th 2023, 3:11 pm
image

Advertisement



2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். 

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்– 

இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், சிறந்த பொருளாதாரத்தை விரைவில் உருவாக்க முடியும் என்று​​ குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது, நாடு சரியான பாதையில் செல்வது 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரையான பயணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாகத் தெரிவித்தார்.

பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்க முடிந்ததால், பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்க முடிந்துள்ளதாக 2024 வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.– 

மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின்  நட்டத்தை ஈடுசெய்ய, அரச வங்கிகளில் தொடர்ச்சியாக கடன்களைப் பெற்று வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமையினால் அந்த வங்கிகள் பலவீனமடைந்து வீழ்ச்சியடைவதைத் தடுக்க   மக்களின் வரிகளைப் பயன்படுத்த அரசுக்கு நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாரிய அளவிலான குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை பிரதான கட்டமைப்புடன் இணைப்பதற்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியான தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும், செயல்திறனற்ற மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக மறுசீரமைப்பதற்கான ஒழுங்குவிதிகள் தற்போது வகுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக  மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

2021ஆம் ஆண்டுக்குள் 900 பில்லியன் ரூபாவாக இருந்த வங்கி மிகைப்பற்று, 70 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இலிருந்து 15% ஆக அதிகரிக்காவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சில குழுக்களின் எளிய மற்றும் அழகான வாக்குறுதிகளால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார்.  

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட 

குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரச செலவினங்களில் 35% அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.  

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் சுமை முழுவதுமாக பொதுமக்களையே சார்ந்துள்ளது எனவும், தேசிய சொத்துக்கள் எனக் கூறித் தொடர்ந்தும் மக்கள் மீது அச்சுமையை சுமத்தும் அரசியல் குழுக்கள் நாட்டை பின்னடையச் செய்து வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

சுற்றுலாத் துறைக்காக நுவரெலியா தபால் அலுவலகம் ஒதுக்கப்பட்டமை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல எனவும், மாறாக அது நுவரெலியா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமே எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வரலாற்று சிறப்புமிக்க புராதனக் கட்டிடங்களை உரிய நேரத்தில் சுற்றுலாத் தொழில்துறை போன்ற அந்நியச் செலாவணி ஈட்டும் பணிகளுக்குப் பயன்படுத்தாவிட்டால் காலி தபால் அலுவலகத்துக்கும் நேர்ந்த கதியே இதற்கும் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார். 

இந்த நாட்டில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்தியல்கள் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் முறைமையையும், பொருளாதார முறைமையையும் முற்றாக மாற்றியமைத்து, புதிய கோணத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த கால அனுபவங்கள், உலகளாவிய போக்குகள் மற்றும் எதிர்கால சவால்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு எமக்குரிய தனித்துவமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும் என்று, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

2021 ஆம் ஆண்டில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7% ஆக இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகத்தை உருவாக்க முடிந்ததாக, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தார்.  

2022 செப்டெம்பர் மாதத்தில் 70% ஆக உயர்ந்திருந்த பணவீக்கத்தை, கடந்த ஒக்டோபர் மாதத்திற்குள் 1.5% ஆகக் குறைக்க முடிந்ததாகவும், அன்று பூஜ்ஜியமாகக் குறைந்திருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பை, 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்துவதற்கு முடிந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

இம்முறை வரவு செலவுத் திட்டம், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மற்றும் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே தனக்கு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.  

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயற்பாடு என்று தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல் நோக்கத்துடன்  மக்களிடையே  நிவாரணம் வழங்கும் கனவு மாளிகைகளை நிர்மாணித்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்படலாம் எனவும்   தெரிவித்தார். 

அரச ஊழியர்களுக்கு தற்போதுள்ள 7,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024 ஜனவரி முதல் நடைமுறைக்குவரும் வகையில் மேலும் 10,000 ரூபாவால் உயர்த்தப்படும்.  

அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு, அதன்படி 2024 இல் ஓய்வூதியத்திற்காக 386 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.  

தொலைதூரக் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகுந்த மாற்றங்களுடன் உணவு மற்றும் தங்குமிடக் கொடுப்பனவை செலுத்துப்படும். 

கடந்த காலங்களில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அரச ஊழியர்களின் அனர்த்தக் கடன் வசதி, 01-01-2024 முதல் முன்னர் காணப்பட்டவாறே வழங்கப்படும். 

கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2024ஆம் ஆண்டில் அது 183 பில்லியன் ரூபா வரை, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. - PMD

அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை. 

ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோய் உதவித்தொகை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும். - 

முதியோருக்கான மாதாந்த உதவித்தொகை 3000 ரூபா வரை அதிகரிக்கப்படும். 

புதிய குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் தாமதமின்றி இணைத்துக்கொள்ள 06 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும். 

அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக  2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்படும். 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 4500 ரூபா மாதாந்த கொடுப்பனவை முறையாக தொடர்ந்து வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. 

கடந்த காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்தை வலுப்படுத்த 30 பில்லியன் ரூபா சலுகைக் கடன் வசதி. 

பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு அந்த வயல் நிலங்களின் முழுத் தனியுரிமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 

நகர்ப்புறங்களில் வாழும்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ரூபா 4 பில்லியன் ஒதுக்கீடு. 

பிம் சவிய வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்க 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

பன்முகப்படுத்தப்பட்ட பட்ஜெட் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு 11,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு தேசிய கொள்முதல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். 

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 

அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கு புதிய பொறிமுறையொன்றை அறிமுகம் செய்யவும், புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் அரச குழுவொன்று நிறுவப்படும்.  அந்த கட்டமைப்புக்கு வெளியே எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. 

2024 வரவு செலவுத்திட்ட மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு ரூ.1260 பில்லியனாக அதிகரிப்பு. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 4% ஆகும். 

பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய 55 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு. 

அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக எதிர்பார்க்கும் நோக்கங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய 2024 முதல் ஒவ்வொரு அமைச்சிலும் விசேட பிரிவொன்று நிறுவப்படும். 

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்க 10 பில்லியன் ரூபாவும் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீதிகளையும், பாலங்களையும் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும். 

நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் குடிநீர் பிரச்சனைகள் இருப்பதால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் போதும், வெளிநாட்டு கடன் உதவிகளைப் பெறும்போதும் நீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்வி சீர்திருத்தங்கள் முழுமையான செயல்படுத்தப்படும். அந்த சீர்திருத்தங்கள் மூலம், தேசிய உயர்கல்வி பேரவை, தேசிய உயர்கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய திறன் ஆணைக்குழு என்பன நிறுவப்படும். - PMD

உயர் தரம் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப்  பல்கலைக்கழகம்,கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப நிறுவனம், முகாமைத்துவ தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஆகிய 04 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும். 

தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டவிதிகள் நிறைவேற்றப்படும். 

19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 

இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல். 

அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டமொன்றை செயல்படுத்துவதோடு, அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறை, தேசிய ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். அதற்காக 2024இல் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், தனியார் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கல்விக் கடன் வழங்கும் முறையை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவை ஸ்தாபித்தல். 

தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திறன் விருத்தி ஆணைக்குழுவை நிறுவுதல்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழில் கல்வி நிறுவனங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படுவதோடு, திறன் விருத்தி மேம்பாட்டுத் துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மாகாண கல்வி சபைகளை நிறுவுதல். 

தொழில்நுட்ப தொழில்துறை திறன்களை மேம்படுத்த நிதியமொன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டிற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் - பல சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி. (முழு விபரம்) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்– இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், சிறந்த பொருளாதாரத்தை விரைவில் உருவாக்க முடியும் என்று​​ குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது, நாடு சரியான பாதையில் செல்வது 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரையான பயணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாகத் தெரிவித்தார்.பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்க முடிந்ததால், பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்க முடிந்துள்ளதாக 2024 வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.– மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின்  நட்டத்தை ஈடுசெய்ய, அரச வங்கிகளில் தொடர்ச்சியாக கடன்களைப் பெற்று வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமையினால் அந்த வங்கிகள் பலவீனமடைந்து வீழ்ச்சியடைவதைத் தடுக்க   மக்களின் வரிகளைப் பயன்படுத்த அரசுக்கு நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.பாரிய அளவிலான குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை பிரதான கட்டமைப்புடன் இணைப்பதற்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியான தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும், செயல்திறனற்ற மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக மறுசீரமைப்பதற்கான ஒழுங்குவிதிகள் தற்போது வகுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக  மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.2021ஆம் ஆண்டுக்குள் 900 பில்லியன் ரூபாவாக இருந்த வங்கி மிகைப்பற்று, 70 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இலிருந்து 15% ஆக அதிகரிக்காவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சில குழுக்களின் எளிய மற்றும் அழகான வாக்குறுதிகளால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார்.  நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரச செலவினங்களில் 35% அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.  நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் சுமை முழுவதுமாக பொதுமக்களையே சார்ந்துள்ளது எனவும், தேசிய சொத்துக்கள் எனக் கூறித் தொடர்ந்தும் மக்கள் மீது அச்சுமையை சுமத்தும் அரசியல் குழுக்கள் நாட்டை பின்னடையச் செய்து வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். சுற்றுலாத் துறைக்காக நுவரெலியா தபால் அலுவலகம் ஒதுக்கப்பட்டமை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல எனவும், மாறாக அது நுவரெலியா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமே எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வரலாற்று சிறப்புமிக்க புராதனக் கட்டிடங்களை உரிய நேரத்தில் சுற்றுலாத் தொழில்துறை போன்ற அந்நியச் செலாவணி ஈட்டும் பணிகளுக்குப் பயன்படுத்தாவிட்டால் காலி தபால் அலுவலகத்துக்கும் நேர்ந்த கதியே இதற்கும் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இந்த நாட்டில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்தியல்கள் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் முறைமையையும், பொருளாதார முறைமையையும் முற்றாக மாற்றியமைத்து, புதிய கோணத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.கடந்த கால அனுபவங்கள், உலகளாவிய போக்குகள் மற்றும் எதிர்கால சவால்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு எமக்குரிய தனித்துவமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும் என்று, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  2021 ஆம் ஆண்டில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7% ஆக இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகத்தை உருவாக்க முடிந்ததாக, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தார்.  2022 செப்டெம்பர் மாதத்தில் 70% ஆக உயர்ந்திருந்த பணவீக்கத்தை, கடந்த ஒக்டோபர் மாதத்திற்குள் 1.5% ஆகக் குறைக்க முடிந்ததாகவும், அன்று பூஜ்ஜியமாகக் குறைந்திருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பை, 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்துவதற்கு முடிந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  இம்முறை வரவு செலவுத் திட்டம், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மற்றும் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே தனக்கு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.  வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயற்பாடு என்று தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல் நோக்கத்துடன்  மக்களிடையே  நிவாரணம் வழங்கும் கனவு மாளிகைகளை நிர்மாணித்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்படலாம் எனவும்   தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு தற்போதுள்ள 7,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024 ஜனவரி முதல் நடைமுறைக்குவரும் வகையில் மேலும் 10,000 ரூபாவால் உயர்த்தப்படும்.  அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு, அதன்படி 2024 இல் ஓய்வூதியத்திற்காக 386 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.  தொலைதூரக் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகுந்த மாற்றங்களுடன் உணவு மற்றும் தங்குமிடக் கொடுப்பனவை செலுத்துப்படும். கடந்த காலங்களில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அரச ஊழியர்களின் அனர்த்தக் கடன் வசதி, 01-01-2024 முதல் முன்னர் காணப்பட்டவாறே வழங்கப்படும். கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2024ஆம் ஆண்டில் அது 183 பில்லியன் ரூபா வரை, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. - PMDஅஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை. ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோய் உதவித்தொகை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும். - முதியோருக்கான மாதாந்த உதவித்தொகை 3000 ரூபா வரை அதிகரிக்கப்படும். புதிய குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் தாமதமின்றி இணைத்துக்கொள்ள 06 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும். அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக  2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்படும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 4500 ரூபா மாதாந்த கொடுப்பனவை முறையாக தொடர்ந்து வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. கடந்த காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்தை வலுப்படுத்த 30 பில்லியன் ரூபா சலுகைக் கடன் வசதி. பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு அந்த வயல் நிலங்களின் முழுத் தனியுரிமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் வாழும்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ரூபா 4 பில்லியன் ஒதுக்கீடு. பிம் சவிய வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்க 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பன்முகப்படுத்தப்பட்ட பட்ஜெட் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு 11,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு தேசிய கொள்முதல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கு புதிய பொறிமுறையொன்றை அறிமுகம் செய்யவும், புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் அரச குழுவொன்று நிறுவப்படும்.  அந்த கட்டமைப்புக்கு வெளியே எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. 2024 வரவு செலவுத்திட்ட மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு ரூ.1260 பில்லியனாக அதிகரிப்பு. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 4% ஆகும். பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய 55 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு. அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக எதிர்பார்க்கும் நோக்கங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய 2024 முதல் ஒவ்வொரு அமைச்சிலும் விசேட பிரிவொன்று நிறுவப்படும். சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்க 10 பில்லியன் ரூபாவும் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீதிகளையும், பாலங்களையும் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும். நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் குடிநீர் பிரச்சனைகள் இருப்பதால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் போதும், வெளிநாட்டு கடன் உதவிகளைப் பெறும்போதும் நீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.கல்வி சீர்திருத்தங்கள் முழுமையான செயல்படுத்தப்படும். அந்த சீர்திருத்தங்கள் மூலம், தேசிய உயர்கல்வி பேரவை, தேசிய உயர்கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய திறன் ஆணைக்குழு என்பன நிறுவப்படும். - PMDஉயர் தரம் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப்  பல்கலைக்கழகம்,கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப நிறுவனம், முகாமைத்துவ தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஆகிய 04 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும். தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டவிதிகள் நிறைவேற்றப்படும். 19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல். அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டமொன்றை செயல்படுத்துவதோடு, அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறை, தேசிய ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். அதற்காக 2024இல் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், தனியார் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கல்விக் கடன் வழங்கும் முறையை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவை ஸ்தாபித்தல். தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திறன் விருத்தி ஆணைக்குழுவை நிறுவுதல்.மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழில் கல்வி நிறுவனங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படுவதோடு, திறன் விருத்தி மேம்பாட்டுத் துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மாகாண கல்வி சபைகளை நிறுவுதல். தொழில்நுட்ப தொழில்துறை திறன்களை மேம்படுத்த நிதியமொன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டிற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 

Advertisement

Advertisement

Advertisement