• May 04 2025

வரலாற்று வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!

Chithra / Dec 19th 2023, 7:35 am
image

 

தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று  காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.  

வரலாற்று வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து.  தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.நேற்று  காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.  

Advertisement

Advertisement

Advertisement

Buy Now