• May 18 2024

கொத்மலை மகாவலி மஹசாய விகாரையில் ஜனாதிபதி வழிபாடு!

Tamil nila / Dec 31st 2022, 6:45 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (30) பிற்பகல் கொத்மலை மகாவலி மஹசாய விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.



அங்கு கொத்மலை மகாவலி மஹசாய விகாரதிபதி கௌரவ திஸ்பனே ஜினாநந்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரை சந்தித்து ஜனாதிபதிக்கு ஆசி பெற்றார்.



புனித ஸ்தலத்தில் கண்காணிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் பார்வையிட்ட ஜனாதிபதி, அதன் பின்னர் வணக்கத்துக்குரிய திஸ்பனே ஜினாநந்த நாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினரை சந்தித்து உரையாற்றினார்.



மறைந்த காமினி திசாநாயக்கவின் திட்டத்திற்கு அமைய , மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1980களின் முற்பகுதியில் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்த கொத்மலை மகாவலி மஹசாய இந்நாட்டில் ஒரு சிறந்த வடிவமைப்பாகும்.



முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்...


கொத்மலை மகாவலி மஹசாய விகாரையில் ஜனாதிபதி வழிபாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (30) பிற்பகல் கொத்மலை மகாவலி மஹசாய விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.அங்கு கொத்மலை மகாவலி மஹசாய விகாரதிபதி கௌரவ திஸ்பனே ஜினாநந்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரை சந்தித்து ஜனாதிபதிக்கு ஆசி பெற்றார்.புனித ஸ்தலத்தில் கண்காணிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் பார்வையிட்ட ஜனாதிபதி, அதன் பின்னர் வணக்கத்துக்குரிய திஸ்பனே ஜினாநந்த நாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினரை சந்தித்து உரையாற்றினார்.மறைந்த காமினி திசாநாயக்கவின் திட்டத்திற்கு அமைய , மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1980களின் முற்பகுதியில் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்த கொத்மலை மகாவலி மஹசாய இந்நாட்டில் ஒரு சிறந்த வடிவமைப்பாகும்.முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement