தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது என்பதை அறிந்த ரணில் விக்கிரமசிங்க. இனப்பிரச்சினைக்கு தீர்வு தன்னால் வழங்க முடியும் என அன்மைய நாட்களாக கருத்துக்கள் தெரிவிப்பதாக இன்று (29) இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார்.
தான் ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்ளாக இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக எந்த நகர்வுகளையும் எடுக்காத ரணில் விக்கிரமசிங்க தற்போது பொலிஸ் அதிகாரம் இல்லாத ஏனையை விடயங்களை உள்ளடக்கி 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வினை வழங்க தன்னால் முடியும் எனவும் அதற்கான நகர்வுகளை தான் ஆரம்பிக்க உள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக நாம் அறிகின்றோம்.
இலங்கை உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கொன்றில் 9 நீதிபதிகள் கொண்ட பெருன்பான்மை நீதிபதிகள் குழு ஓற்றை ஆட்சிக்குள் அதிகாரம் பகிர முடியாது என தீர்ப்பினை அளித்துள்ளது. அத்தோடு இது சாரப்பட்டு தொடுக்கப்பட்ட 30இற்கு மேற்பட்ட வழக்குகளிலும் உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பினைச் சார்ந்தே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது இப்படி இருக்க ரணில் அவர்களால் எப்படி நீதிமன்ற தீர்பினை மீறி ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க முடியும்.
மேலும் எதிர்வரும் தேர்தலில் சிங்கள பெரும்பான்மை மக்களால் தென்னிலங்கையில் ஒரு பொருட்டாக கூட கருதாத ரணில் விக்கிரமசிங்க திடீர் என்று இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது. இந்தத் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போவது தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றால் மட்டுமே தன்னால் வெல்ல முடியும் என்ற நிலையில். இவ்வாறக இனப்பிரச்சினையை கையில் எடுத்து தனக்குச் சார்பாக உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி தவிந்த ஏனை தமிழ்க் கட்சிகளை வைத்து தமிழ் மக்களிடம் ரணிலால் தான் முடியும் என்ற விதத்தில் நம்ப வைத்து அவர்களை வைத்தே தமிழ் மக்களின் வாக்குகளை பெற நினைக்கின்றார்.
எமது கட்சி அமெரிக்கா,இங்கிலாந்து, இந்தியா போன்ற பல நாடுகளுக்குச் சென்றும் உள்நாட்டில் உள்ள இராஜதந்திரிகளை நாம் சந்தித்து தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளக்கூடிய தமிழ் தேசம் அங்கிகரிக்கின்ற சமஸ்டிக் கட்டமைப்புடன் கூடிய சுயாட்சிக் கட்டைமைப்பைத் தான் விரும்புகின்றார்கள் என்று நாம் கூற அவர்கள் இல்லை என்று கூறுகின்றார்கள்.
நீங்கள் மட்டும் தான் அப்படி கூறுகின்றீர்கள் மற்றவர்கள் 13ஆம் திருத்தத்தினை அழுல் படுத்துமாறே கேட்கின்றனர் என்று கூறுகின்றார்கள். அப்படி என்றால் எம்மைத் தவிர மற்றைய தமிழ்க் கட்சிகள் ஒற்றை ஆட்சிக்குள்ளான தீர்வினையே விரும்புகின்றது என்பதனை இது காட்டுகின்றது.
இன்றும் எம் மத்தியில் ரணிலுக்கு கொம்பு சுத்துகின்றவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் இறுதி நேரத்தில் வந்து இவர்தான் எங்களுக்கு தீர்வு தாரன் என்று கூறுகின்றார். எனவே நாம் இவரையே ஆதரிப்போம் என்று கூறுவார்கள். இன்றைய இலங்கையில் பொருளாதார நெருக்கடியான இந்தச் சூழ் நிலை தமிழ் மக்களுக்கு சாதகமான சூழ்நிலை என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இந்த நிலையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை சரியாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் இதனை தெளிவு படுத்தவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்ததாகவும் -குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது- கஜேந்திரகுமார் எம்.பி சாடல். தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் அதிபர் தேர்தலில் வெல்ல முடியாது என்பதை அறிந்த ரணில் விக்கிரமசிங்க. இனப்பிரச்சினைக்கு தீர்வு தன்னால் வழங்க முடியும் என அன்மைய நாட்களாக கருத்துக்கள் தெரிவிப்பதாக இன்று (29) இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார்.தான் ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்ளாக இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக எந்த நகர்வுகளையும் எடுக்காத ரணில் விக்கிரமசிங்க தற்போது பொலிஸ் அதிகாரம் இல்லாத ஏனையை விடயங்களை உள்ளடக்கி 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வினை வழங்க தன்னால் முடியும் எனவும் அதற்கான நகர்வுகளை தான் ஆரம்பிக்க உள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக நாம் அறிகின்றோம்.இலங்கை உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கொன்றில் 9 நீதிபதிகள் கொண்ட பெருன்பான்மை நீதிபதிகள் குழு ஓற்றை ஆட்சிக்குள் அதிகாரம் பகிர முடியாது என தீர்ப்பினை அளித்துள்ளது. அத்தோடு இது சாரப்பட்டு தொடுக்கப்பட்ட 30இற்கு மேற்பட்ட வழக்குகளிலும் உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பினைச் சார்ந்தே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது இப்படி இருக்க ரணில் அவர்களால் எப்படி நீதிமன்ற தீர்பினை மீறி ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க முடியும். மேலும் எதிர்வரும் தேர்தலில் சிங்கள பெரும்பான்மை மக்களால் தென்னிலங்கையில் ஒரு பொருட்டாக கூட கருதாத ரணில் விக்கிரமசிங்க திடீர் என்று இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது. இந்தத் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போவது தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றால் மட்டுமே தன்னால் வெல்ல முடியும் என்ற நிலையில். இவ்வாறக இனப்பிரச்சினையை கையில் எடுத்து தனக்குச் சார்பாக உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி தவிந்த ஏனை தமிழ்க் கட்சிகளை வைத்து தமிழ் மக்களிடம் ரணிலால் தான் முடியும் என்ற விதத்தில் நம்ப வைத்து அவர்களை வைத்தே தமிழ் மக்களின் வாக்குகளை பெற நினைக்கின்றார்.எமது கட்சி அமெரிக்கா,இங்கிலாந்து, இந்தியா போன்ற பல நாடுகளுக்குச் சென்றும் உள்நாட்டில் உள்ள இராஜதந்திரிகளை நாம் சந்தித்து தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தம்மை தாமே ஆளக்கூடிய தமிழ் தேசம் அங்கிகரிக்கின்ற சமஸ்டிக் கட்டமைப்புடன் கூடிய சுயாட்சிக் கட்டைமைப்பைத் தான் விரும்புகின்றார்கள் என்று நாம் கூற அவர்கள் இல்லை என்று கூறுகின்றார்கள்.நீங்கள் மட்டும் தான் அப்படி கூறுகின்றீர்கள் மற்றவர்கள் 13ஆம் திருத்தத்தினை அழுல் படுத்துமாறே கேட்கின்றனர் என்று கூறுகின்றார்கள். அப்படி என்றால் எம்மைத் தவிர மற்றைய தமிழ்க் கட்சிகள் ஒற்றை ஆட்சிக்குள்ளான தீர்வினையே விரும்புகின்றது என்பதனை இது காட்டுகின்றது. இன்றும் எம் மத்தியில் ரணிலுக்கு கொம்பு சுத்துகின்றவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் இறுதி நேரத்தில் வந்து இவர்தான் எங்களுக்கு தீர்வு தாரன் என்று கூறுகின்றார். எனவே நாம் இவரையே ஆதரிப்போம் என்று கூறுவார்கள். இன்றைய இலங்கையில் பொருளாதார நெருக்கடியான இந்தச் சூழ் நிலை தமிழ் மக்களுக்கு சாதகமான சூழ்நிலை என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இந்த நிலையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை சரியாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் இதனை தெளிவு படுத்தவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்ததாகவும் -குறிப்பிட்டார்.