• Jul 27 2024

ஜனாதிபதி நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்! samugammedia

Tamil nila / Oct 13th 2023, 8:41 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) சீனா செல்லவுள்ளார்.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் அங்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி நாளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு செல்லவுள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நேற்று பிற்பகல் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அரசாங்கத்தின் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதியும் பெறப்பட்டது.


ஜனாதிபதி நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) சீனா செல்லவுள்ளார்.நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் அங்கு இடம்பெறவுள்ளது.இதேவேளை, எதிர்வரும் வாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றது.ஜனாதிபதி நாளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு செல்லவுள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நேற்று பிற்பகல் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு அரசாங்கத்தின் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதியும் பெறப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement