• May 18 2024

விரைவில் பொருத்தமான ஒருவரை பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி நியமிப்பார் - ஐ.தே.க. நம்பிக்கை samugammedia

Chithra / Nov 7th 2023, 9:03 am
image

Advertisement

 

பொலிஸ்மா அதிபராக அரசியலமைப்பு பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பிரகாரம் விரைவில் தகுதியான ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவி்த்தார்.

பொலிஸ் அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கே பூரண அதிகாரம் இருக்கிறது. 

ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பும் நபர்கள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு இருக்கிறது.

அதற்காக அவர்கள் பெயர் குறிப்பிட்டு அனுப்பும் நபரைத்தான் பொலிஸ் மா அதிபராக நியமிக்க வேண்டும் என்பதில்லை.

அத்துடன் உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும்போது அதனை வெளிப்படைத்தன்மையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்கே அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி பெயர்களை  பரிந்துரை செய்கிறார். 

அரசியலமைப்பு பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது.

 அதனால் நாட்டை நிர்வகித்து செல்லும் ஜனாதிபதிக்கு, அவருக்கு பொருத்தமான ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுப்பார். என்றார்.

விரைவில் பொருத்தமான ஒருவரை பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி நியமிப்பார் - ஐ.தே.க. நம்பிக்கை samugammedia  பொலிஸ்மா அதிபராக அரசியலமைப்பு பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பிரகாரம் விரைவில் தகுதியான ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவி்த்தார்.பொலிஸ் அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கே பூரண அதிகாரம் இருக்கிறது. ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பும் நபர்கள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு இருக்கிறது.அதற்காக அவர்கள் பெயர் குறிப்பிட்டு அனுப்பும் நபரைத்தான் பொலிஸ் மா அதிபராக நியமிக்க வேண்டும் என்பதில்லை.அத்துடன் உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும்போது அதனை வெளிப்படைத்தன்மையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்கே அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி பெயர்களை  பரிந்துரை செய்கிறார். அரசியலமைப்பு பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் நாட்டை நிர்வகித்து செல்லும் ஜனாதிபதிக்கு, அவருக்கு பொருத்தமான ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுப்பார். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement