இலங்கைத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தினார்.
சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றபோதே, மேற்குறித்த விடயத்தைச் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வுக்கான சாத்தியமின்மைகள் எழும்போது அது சார்ந்த அரசியல் நகர்வுகளின் தேவைப்பாடு மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அமெரிக்கத் தூதுவருடனான இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அழுத்தம் வழங்குங்கள்: அமெரிக்காவிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை இலங்கைத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தினார்.சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றபோதே, மேற்குறித்த விடயத்தைச் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பின்போது, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வுக்கான சாத்தியமின்மைகள் எழும்போது அது சார்ந்த அரசியல் நகர்வுகளின் தேவைப்பாடு மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.அமெரிக்கத் தூதுவருடனான இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.