அரசியல் கைதிகளுக்கு சிறையில் அச்சுறுத்தல்; ததேகூட்டமைப்பு, ததேமமுன்னணி கண்டனம்

267

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்த , அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியுள்ளர்.

மேலும் இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ததேம முன்னனி என்பன வன்மையாக கண்டித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருகையில்,

தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து,அவர்களில் இருவரை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவின் முன்னால் மண்டியிட வைத்துள்ளார்.கடந்த 12 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அராஜகமான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விசாரணையின் பின்னர் அவரை கைது செய்ய வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு , அதுவரை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு கேட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி துறக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.