• Nov 24 2024

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை - நாட்டு மக்களுக்கும் பொருளாதார நிவாரணம்..!samugammedia

mathuri / Jan 4th 2024, 10:07 pm
image

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என்பதோடு இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அனைத்து மக்களுக்கும் பொருளாதார நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த வருடத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டில் 5 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1788 ஆகும். இது தொடர்பான 1289 புகார்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 500 முறைப்பாடுகளை உடனடியாக ஆராயுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, காணாமல் போனோர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அடுத்த 6 மாதங்களுக்குள் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அத்துடன், புதிய பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எவருக்கும் இலங்கைக்கு வந்து பிரேரணையை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கில் உள்ள ஆற்றலைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டை எரிசக்தி ஏற்றுமதிக்கு தயார்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக புனரீன் ஆற்றல் மையமாக கட்டியெழுப்பப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். வடக்கின் விவசாயத்தை நவீனமயப்படுத்தி நாட்டிலேயே வடமாகாணத்தை விவசாய மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமாகாணத்தில் காணி விடுவிப்பு துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஜனாதிபதி, பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு தேவையான காணிகளின் அளவு குறித்து இந்த பெப்ரவரி மாதத்திற்குள் இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

வடக்கின் காணி பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் வந்து காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், வடக்கின் நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு நீர்த் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் திட்டங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தற்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திரு.ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை - நாட்டு மக்களுக்கும் பொருளாதார நிவாரணம்.samugammedia நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என்பதோடு இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அனைத்து மக்களுக்கும் பொருளாதார நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், கடந்த வருடத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.அத்துடன், இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டில் 5 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1788 ஆகும். இது தொடர்பான 1289 புகார்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 500 முறைப்பாடுகளை உடனடியாக ஆராயுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, காணாமல் போனோர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அடுத்த 6 மாதங்களுக்குள் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.அத்துடன், புதிய பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எவருக்கும் இலங்கைக்கு வந்து பிரேரணையை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.வடக்கில் உள்ள ஆற்றலைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டை எரிசக்தி ஏற்றுமதிக்கு தயார்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக புனரீன் ஆற்றல் மையமாக கட்டியெழுப்பப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். வடக்கின் விவசாயத்தை நவீனமயப்படுத்தி நாட்டிலேயே வடமாகாணத்தை விவசாய மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.வடமாகாணத்தில் காணி விடுவிப்பு துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஜனாதிபதி, பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு தேவையான காணிகளின் அளவு குறித்து இந்த பெப்ரவரி மாதத்திற்குள் இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.வடக்கின் காணி பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் வந்து காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், வடக்கின் நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு நீர்த் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் திட்டங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தற்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திரு.ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement