• May 18 2024

யாழில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்..! சித்தார்த்தன் எம்.பி கலந்துரையாடல்..!samugammedia

Sharmi / May 27th 2023, 11:56 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் இளவாலை வடக்கு  கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது,  இப்பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் தனியார் கம்பனி ஒன்று எமது பிரதேசத்தில் இருந்து அதிகளவான கிணற்றில் இருந்து  நீரை ஐஸ் உற்பத்திக்காக எடுத்து செல்வதால் தமது விவசாயக் கிணறுகள் அதிகளவாக நீர் மட்டம் குறைவதாகவும் எதிர்காலத்தில் உவர் நீராக மாறும் சாத்தியம் காணப்படுவதால் எமது பிரதேசம் கொடி முந்திரிகை செய்கையை அதிகளவான விவசாயிகள் பாதிப்படைந்து வருவதாக தெரிவித்தனர்.

அத்தோடு நீர் அகத்துறிஞ்சப்படும் கம்பனியையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அத்தோடு 200 மேற்பட்ட கொடி முந்திரிகை செய்கையாளர்கள் ஏனைய செய்கையாளர்கள் பாதிப்படைந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தினர்.

இதன் பின்னர் இது தொடர்பான கோரிக்கை  கடிதம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மேட்டுநில செய்கையாளர்களுக்கு உரம் மானியமாக வழங்கப்படுவதில்லை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை உரிய அமைச்சருடன் பேசி முடிவு எடுத்து தருவதாகவும் கருத்து கூறினார்.

கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், இளவாலை  வடக்கு விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


யாழில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். சித்தார்த்தன் எம்.பி கலந்துரையாடல்.samugammedia யாழ்ப்பாணம் இளவாலை வடக்கு  கமக்கார அமைப்பிற்குட்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.இதன் போது,  இப்பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் தனியார் கம்பனி ஒன்று எமது பிரதேசத்தில் இருந்து அதிகளவான கிணற்றில் இருந்து  நீரை ஐஸ் உற்பத்திக்காக எடுத்து செல்வதால் தமது விவசாயக் கிணறுகள் அதிகளவாக நீர் மட்டம் குறைவதாகவும் எதிர்காலத்தில் உவர் நீராக மாறும் சாத்தியம் காணப்படுவதால் எமது பிரதேசம் கொடி முந்திரிகை செய்கையை அதிகளவான விவசாயிகள் பாதிப்படைந்து வருவதாக தெரிவித்தனர்.அத்தோடு நீர் அகத்துறிஞ்சப்படும் கம்பனியையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அத்தோடு 200 மேற்பட்ட கொடி முந்திரிகை செய்கையாளர்கள் ஏனைய செய்கையாளர்கள் பாதிப்படைந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தினர்.இதன் பின்னர் இது தொடர்பான கோரிக்கை  கடிதம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.மேட்டுநில செய்கையாளர்களுக்கு உரம் மானியமாக வழங்கப்படுவதில்லை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை உரிய அமைச்சருடன் பேசி முடிவு எடுத்து தருவதாகவும் கருத்து கூறினார்.கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், இளவாலை  வடக்கு விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement