• May 07 2025

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்

Chithra / May 6th 2025, 3:14 pm
image


இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு  13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில்  இன்று (06) காலை 7.00 முதல் இடம்பெற்று வரும் நிலையில் நாட்டின் அரசியல் பிரமுகர்கள் பலரும் தமது வாக்கினை செலுத்தி வருகின்றனர். 

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அவரது சொந்த இடமான வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். 


மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.


இதேவேளை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமம் ராஜபக்ஸவும் தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார். 

இதுதொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்  யாழ் வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்தில் தனது வாக்கினைச் செலுத்தினார்.


இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள பாலர் பாடசாலையில் அமைந்துள்ளது வாக்குச் சாவடியில் தமது வாக்கினைப் பதிவு செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தாண்டவன்வெளி ஜோசப் வாக்ஸ் வித்யாலயத்தில் தமது வாக்கைப் பதிவு செய்தார்.

மட்டக்களப்பு மாநகரில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் பலரும் தமது வாக்கினை பதிவு செய்தனர்.

 


முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு, பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது வாக்கினைச் செலுத்தினார்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் சந்திரகுமார் திருநகர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்,


முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

 

 தர்மலிங்கம் சித்தார்த்தன், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார். 

 

2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்காக விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி தன்னுடைய வாக்கினை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பதிவு செய்தார்.


யாழ்.மிருசுவில் உசைன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான கருணைநாதன் இளங்குமரன் தனது வாக்கினை செலுத்தினார்.


 இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் திருகோணமலை தமிழ் மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.


மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இரதாகிருஷ்ணான், நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.



இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவதற்கு முன் விஷேட வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட பின்னர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி  ஹட்டனில் உள்ள ஸ்ரீபாத சிங்கள வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.


இதேவேளை  தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி கினிகத்தேனை களுகல மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.


விடத்தல் தீவு தூய யோசேவாஸ் மத்திய மகாவித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கல நாதன்  தனது வாக்கை செலுத்தினார். 


மன்னார் தாராபுரம் அல்மினா மகாவித்தியாலயத்தில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது வாக்கை செலுத்தினார்.


ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க தனது வாக்கு பதிவினை நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை வழங்கினார். 


வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.


 தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி அமைச்சருமான மதுர செனவிரத்ன தனது வாக்கு பதிவினை நுவரெலியா ஸ்ரீ பியதிஸ்ஸ வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.


ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முக்கிய அரசியல் பிரமுகர்கள் இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு  13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில்  இன்று (06) காலை 7.00 முதல் இடம்பெற்று வரும் நிலையில் நாட்டின் அரசியல் பிரமுகர்கள் பலரும் தமது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அவரது சொந்த இடமான வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.இதேவேளை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமம் ராஜபக்ஸவும் தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார். இதுதொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்  யாழ் வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்தில் தனது வாக்கினைச் செலுத்தினார்.இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள பாலர் பாடசாலையில் அமைந்துள்ளது வாக்குச் சாவடியில் தமது வாக்கினைப் பதிவு செய்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தாண்டவன்வெளி ஜோசப் வாக்ஸ் வித்யாலயத்தில் தமது வாக்கைப் பதிவு செய்தார்.மட்டக்களப்பு மாநகரில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் பலரும் தமது வாக்கினை பதிவு செய்தனர். முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு, பொதுநோக்கு மண்டபத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது வாக்கினைச் செலுத்தினார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் சந்திரகுமார் திருநகர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்,முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.  தர்மலிங்கம் சித்தார்த்தன், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு கல்லூரியில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.  2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்காக விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி தன்னுடைய வாக்கினை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பதிவு செய்தார்.யாழ்.மிருசுவில் உசைன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான கருணைநாதன் இளங்குமரன் தனது வாக்கினை செலுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் திருகோணமலை தமிழ் மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இரதாகிருஷ்ணான், நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்  கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவதற்கு முன் விஷேட வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட பின்னர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி  ஹட்டனில் உள்ள ஸ்ரீபாத சிங்கள வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.இதேவேளை  தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி கினிகத்தேனை களுகல மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.விடத்தல் தீவு தூய யோசேவாஸ் மத்திய மகாவித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கல நாதன்  தனது வாக்கை செலுத்தினார். மன்னார் தாராபுரம் அல்மினா மகாவித்தியாலயத்தில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது வாக்கை செலுத்தினார்.ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க தனது வாக்கு பதிவினை நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை வழங்கினார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார். தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி அமைச்சருமான மதுர செனவிரத்ன தனது வாக்கு பதிவினை நுவரெலியா ஸ்ரீ பியதிஸ்ஸ வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement