• Dec 01 2024

மன்னாரில் மழை நீர் சேமிக்கும் திட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்துங்கள்...! விடுக்கப்பட்ட கோரிக்கை...!samugammedia

Sharmi / Jan 4th 2024, 10:13 am
image

மன்னார் மாவட்டத்தில் மழை நீரை சேமிக்கும் நடை முறை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் தடை இன்றி விவசாய செய்கையை முன்னெடுக்க முடியும் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வருடா வருடம் ஒவ்வொரு பருவ காலங்களிலும் மழை பெய்வது வழமை. மழை பெய்யும் போது பிரதேசங்களில் வெள்ள நீர் பெருக்கெடுக்கும்.

மழை நீர் கடலுடன் கலக்கும்.8 ஆம் மாதத்திற்கு பின்னர் பெய்யும் மழையின் நீரை நாங்கள் எந்த வகையிலும் சேமிப்பது இல்லை.அனைத்து மழை நீரும் கடலுடன் கலக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 6 இற்கும் மேற்பட்ட ஆறுகள் காணப்படுகின்றது.அனைத்தும் அதிகமான நீரை கொண்டு செல்லக் கூடிய பெறுமதியான ஆறுகளாக காணப்படுகிறது.இந்த ஆறுகள் ஊடாக  வருகின்ற நீர் கடலுடன் கலக்கின்றது.

ஆனால் 6 ஆம் மாதத்தின் பின்னர் நெற்பயிர்ச் செய்கை,தோட்டம் மற்றும் கால்நடைகளுக்கு நீர் இல்லை என திரிவோம்.

எனவே மன்னார் மாவட்டத்தில் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் பாரிய குளங்களை கட்டினால் மன்னார் மாவட்ட விவசாயிகள் இரண்டு  போகத்திற்கு தேவையான நீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த முடியும்.

அருகில் உள்ள யாழ் மாவட்டத்திற்கும் தேவையான நீரை வழங்க முடியும். பாலியாற்று தண்ணீர் கடலுடன் கலப்பதை அவதானிக்கிறோம்.இவ்வளவு சுத்தமான நீர் ஆறுகள் ஊடக சென்று கடலுடன் கலக்கின்றது.

விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் நீருக்காக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.



மன்னாரில் மழை நீர் சேமிக்கும் திட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்துங்கள். விடுக்கப்பட்ட கோரிக்கை.samugammedia மன்னார் மாவட்டத்தில் மழை நீரை சேமிக்கும் நடை முறை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் தடை இன்றி விவசாய செய்கையை முன்னெடுக்க முடியும் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வருடா வருடம் ஒவ்வொரு பருவ காலங்களிலும் மழை பெய்வது வழமை. மழை பெய்யும் போது பிரதேசங்களில் வெள்ள நீர் பெருக்கெடுக்கும்.மழை நீர் கடலுடன் கலக்கும்.8 ஆம் மாதத்திற்கு பின்னர் பெய்யும் மழையின் நீரை நாங்கள் எந்த வகையிலும் சேமிப்பது இல்லை.அனைத்து மழை நீரும் கடலுடன் கலக்கின்றது.மன்னார் மாவட்டத்தில் சுமார் 6 இற்கும் மேற்பட்ட ஆறுகள் காணப்படுகின்றது.அனைத்தும் அதிகமான நீரை கொண்டு செல்லக் கூடிய பெறுமதியான ஆறுகளாக காணப்படுகிறது.இந்த ஆறுகள் ஊடாக  வருகின்ற நீர் கடலுடன் கலக்கின்றது.ஆனால் 6 ஆம் மாதத்தின் பின்னர் நெற்பயிர்ச் செய்கை,தோட்டம் மற்றும் கால்நடைகளுக்கு நீர் இல்லை என திரிவோம்.எனவே மன்னார் மாவட்டத்தில் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் பாரிய குளங்களை கட்டினால் மன்னார் மாவட்ட விவசாயிகள் இரண்டு  போகத்திற்கு தேவையான நீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த முடியும்.அருகில் உள்ள யாழ் மாவட்டத்திற்கும் தேவையான நீரை வழங்க முடியும். பாலியாற்று தண்ணீர் கடலுடன் கலப்பதை அவதானிக்கிறோம்.இவ்வளவு சுத்தமான நீர் ஆறுகள் ஊடக சென்று கடலுடன் கலக்கின்றது.விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் நீருக்காக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement