• May 18 2024

இலங்கை கடற்படையினரின் கைதுக்கு எதிர்ப்பு...! இராமேஸ்வரம் மீனவர்களின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்...!samugammedia

Sharmi / Oct 16th 2023, 6:19 pm
image

Advertisement

தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன் தினம் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஐந்து விசைப் படகையும், 27 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோபு  தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இதில் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததை வாபஸ் பெறுவதாகவும், ஆனால் நாளை  மறுநாள் ராமேஸ்வரத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.


இலங்கை கடற்படையினரின் கைதுக்கு எதிர்ப்பு. இராமேஸ்வரம் மீனவர்களின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்.samugammedia தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன் தினம் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஐந்து விசைப் படகையும், 27 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோபு  தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.இதில் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததை வாபஸ் பெறுவதாகவும், ஆனால் நாளை  மறுநாள் ராமேஸ்வரத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement