• Jun 18 2024

மூதூரில் ஆசிரிய ஆலோசகர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைப்பு!

Sharmi / Jan 25th 2023, 8:16 pm
image

Advertisement

மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. 

இதுவரையில் இலங்கை ஆசிரியர் சேவையில் (SLTS)இருந்து மூதூர் வலயத்தில் ஆசிரிய ஆலோசகர்களாகக்  கடமையாற்றி வந்த உத்தியோகத்தர்கள் 2022.01.02ம் திகதி முதல் செயற்படும் வகையில் இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின்(SLTAS) நிமித்தம் உள்வாங்கப்பட்டு அதற்கான  நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக இன்று வியாழக்கிழமை மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், Teachers centre manager, நிருவாக உத்தியோகத்தர், ஆசிரிய ஆலோசகர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









மூதூரில் ஆசிரிய ஆலோசகர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைப்பு மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. இதுவரையில் இலங்கை ஆசிரியர் சேவையில் (SLTS)இருந்து மூதூர் வலயத்தில் ஆசிரிய ஆலோசகர்களாகக்  கடமையாற்றி வந்த உத்தியோகத்தர்கள் 2022.01.02ம் திகதி முதல் செயற்படும் வகையில் இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின்(SLTAS) நிமித்தம் உள்வாங்கப்பட்டு அதற்கான  நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக இன்று வியாழக்கிழமை மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், Teachers centre manager, நிருவாக உத்தியோகத்தர், ஆசிரிய ஆலோசகர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement