• Jun 15 2024

ஜேர்மனி நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீச புடினுக்கு கோரிக்கை!

Tamil nila / Jan 25th 2023, 8:36 pm
image

Advertisement

ஜேர்மனி மீது அணுகுண்டு வீசவேண்டும் என புடின் ஆதரவாளர் ஒருவர் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


உக்ரைன் போரில் தேவையில்லாமல் தலையிட்டு ரஷ்ய ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என ஆரம்பம் முதலே தயங்கிநின்றது ஜேர்மனி.இந்நிலையில், ஜேர்மன் தயாரிப்பான Leopard-2 tanks என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுத்து உதவ சில நாடுகள் விருப்பம் தெரிவித்தன.


ஜேர்மனியோ, அந்த போர் வாகனங்களை உக்ரைனுக்கு கொடுக்க மறுத்ததோடு, தனது தயாரிப்பான அந்த போர் வாகனங்களைப் பயன்படுத்தும் மற்ற நாடுகளும் அவற்றை உக்ரைனுக்குக் கொடுக்க அனுமதி மறுத்துவந்தது.அந்த போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுத்தால் ரஷ்ய ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடும் என்பதாலேயே ஜேர்மனி அதற்கு அனுமதியளிக்க மறுத்துவந்தது.


தற்போது Leopard-2 tanks என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுக்க ஜேர்மனி முடிவுசெய்துள்ளது.அப்படி அந்த ஜேர்மன் போர் வாகனங்கள் உக்ரைனுக்குக் கொடுக்கப்படுமானால், ரஷ்யாவை எதிர்த்து அடிக்க அது உக்ரைனுக்கு பெரும் பலமாக அமையும் என நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். அது போரின் திசையையே மாற்றக்கூடும் என கருதுகிறார்கள் அவர்கள்.



ஆகவே, ரஷ்யாவுக்கும் ஜேர்மன் போர் வாகனங்களைக் குறித்து பயம் ஏற்பட்டுவிட்டதுபோல் தோன்றுகிறது. ஜேர்மனி போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுக்க எடுத்துள்ள முடிவு ரஷ்யாவை கடுமையாக எரிச்சல் படுத்தியுள்ளது.ஆகவே, ஜேர்மன் நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீசவேண்டும் என ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டுள்ளார் புடின் ஆதரவாளரான Yevgeny Satanovsky என்பவர்.


1941ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஜேர்மனி மீது குண்டு வீசியது, அதேபோல, ஜேர்மன் நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீசவேண்டும். ஜேர்மன் நாடாளுமன்றம் என்று ஒன்று இருக்கக்கூடாது. அது இருந்த இடத்தில், அணுகுண்டு வீசப்பட்டதால் உருகிய, கதிரியக்கம் கொண்ட நிலம் மட்டுமே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.  

ஜேர்மனி நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீச புடினுக்கு கோரிக்கை ஜேர்மனி மீது அணுகுண்டு வீசவேண்டும் என புடின் ஆதரவாளர் ஒருவர் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.உக்ரைன் போரில் தேவையில்லாமல் தலையிட்டு ரஷ்ய ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என ஆரம்பம் முதலே தயங்கிநின்றது ஜேர்மனி.இந்நிலையில், ஜேர்மன் தயாரிப்பான Leopard-2 tanks என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுத்து உதவ சில நாடுகள் விருப்பம் தெரிவித்தன.ஜேர்மனியோ, அந்த போர் வாகனங்களை உக்ரைனுக்கு கொடுக்க மறுத்ததோடு, தனது தயாரிப்பான அந்த போர் வாகனங்களைப் பயன்படுத்தும் மற்ற நாடுகளும் அவற்றை உக்ரைனுக்குக் கொடுக்க அனுமதி மறுத்துவந்தது.அந்த போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுத்தால் ரஷ்ய ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடும் என்பதாலேயே ஜேர்மனி அதற்கு அனுமதியளிக்க மறுத்துவந்தது.தற்போது Leopard-2 tanks என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுக்க ஜேர்மனி முடிவுசெய்துள்ளது.அப்படி அந்த ஜேர்மன் போர் வாகனங்கள் உக்ரைனுக்குக் கொடுக்கப்படுமானால், ரஷ்யாவை எதிர்த்து அடிக்க அது உக்ரைனுக்கு பெரும் பலமாக அமையும் என நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். அது போரின் திசையையே மாற்றக்கூடும் என கருதுகிறார்கள் அவர்கள்.ஆகவே, ரஷ்யாவுக்கும் ஜேர்மன் போர் வாகனங்களைக் குறித்து பயம் ஏற்பட்டுவிட்டதுபோல் தோன்றுகிறது. ஜேர்மனி போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுக்க எடுத்துள்ள முடிவு ரஷ்யாவை கடுமையாக எரிச்சல் படுத்தியுள்ளது.ஆகவே, ஜேர்மன் நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீசவேண்டும் என ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டுள்ளார் புடின் ஆதரவாளரான Yevgeny Satanovsky என்பவர்.1941ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஜேர்மனி மீது குண்டு வீசியது, அதேபோல, ஜேர்மன் நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீசவேண்டும். ஜேர்மன் நாடாளுமன்றம் என்று ஒன்று இருக்கக்கூடாது. அது இருந்த இடத்தில், அணுகுண்டு வீசப்பட்டதால் உருகிய, கதிரியக்கம் கொண்ட நிலம் மட்டுமே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.  

Advertisement

Advertisement

Advertisement