குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குற்றவாளிகளாக சமூகத்துக்கு சித்திரிக்கப்படுதல் என்பது பாரதூரமான ஒரு மனித உரிமை மீறல் - கோசலை மதன் தெரிவிப்பு..!samugammedia
சட்டங்கள் சமூகத்தில் உள்ள தனிநபர்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை. இந்த பொறிமுறை அனைவருக்கும் சமனான தன்மையிலே பிரயோகிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கோசலை மதன் தெரிவித்தார்.
ஈழத்தை சேர்ந்த புலம்பெயர் அமெரிக்க தொழிலதிபர் ராஜ் ராஜரட்ணம் அவர்கள் தனது சுயசரிதை பற்றி ஆங்கில மொழியில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'சமனற்ற நீதி" நூல் வெளியீடு நேற்று முன்தினம் (20) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் சிறப்புரையாற்றிய போதே கோசலை மதன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ...
பொதுவாக சட்டம் வலியவர்களுக்கானது என்கிற எண்ணம் எம்மிடம் இருக்கிறது. குறிப்பாக பண வசதி படைத்தவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சட்ட ரீதியான பொறுப்புடைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். அவ்வாறு தான் நடக்கிறது என்கிற சிந்தனை எங்களிடம் இருக்கிறது. இந்த விம்பம் ராஜ் ராஜரட்ணத்தின் கைது சம்பவத்தின் மூலமாக உடைக்கப்பட்டிருக்கிறது. வலியவர்களுக்கு எதிராகவும் திட்டமிடப்பட்டு சட்டம் செயற்படுத்தப்படும். அவ்வாறு செயற்படுத்தப்படும்போது வலியவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
சட்டங்கள் சமூகத்தை குறிப்பாக சமூகத்தில் உள்ள தனிநபர்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை. இந்த பொறிமுறை அனைவருக்கும் சமனான தன்மையிலே பிரயோகிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தினுடைய அடிப்படை. சட்டத்தின் மூலம் அனைவரும் சமனான பாதுகாப்பை பெறுகிறார்கள் என்பது தான் சட்டத்தினுடைய அடிப்படை. ஆனால் சட்டம் சிலரை திட்டமிட்டு இலக்கு வைத்து பாய்ச்சப்படுவது இலங்கையிலும் நடக்கிறது, அமெரிக்காவிலும் நடக்கிறது என்பதற்கு ராஜ் ராஜரட்ணம் அவர்கள் ஒரு உதாரணம்.
ஊடகங்கள், ராஜ் ராஜரட்ணத்தை ஒரு குற்றவாளியாக சமூகத்திற்கு எடுத்துச் சென்றிருந்த நிலைப்பாடு சட்ட ரீதியானதா? என்று பார்த்தால் இல்லை. அது சட்டத்துக்கு புறம்பானது. ஆகவே சட்டத்துக்கு புறம்பான வகையிலே குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அணுகப்பட்டு அவர்கள் குற்றவாளிகளாக சமூகத்துக்கு சித்திரிக்கப்படுதல் என்பது பாரதூரமான ஒரு மனித உரிமை மீறல்! ஊடகங்கள் மூலமாகவும், ஏனைய வழிமுறைகளை பயன்படுத்தியும் குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு நபரை குற்றவாளிகளாக காண்பித்தல் என்பது எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ராஜ் ராஜரட்ணத்தினுடைய வழக்கின் தீர்ப்பு சான்று என அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குற்றவாளிகளாக சமூகத்துக்கு சித்திரிக்கப்படுதல் என்பது பாரதூரமான ஒரு மனித உரிமை மீறல் - கோசலை மதன் தெரிவிப்பு.samugammedia சட்டங்கள் சமூகத்தில் உள்ள தனிநபர்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை. இந்த பொறிமுறை அனைவருக்கும் சமனான தன்மையிலே பிரயோகிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கோசலை மதன் தெரிவித்தார். ஈழத்தை சேர்ந்த புலம்பெயர் அமெரிக்க தொழிலதிபர் ராஜ் ராஜரட்ணம் அவர்கள் தனது சுயசரிதை பற்றி ஆங்கில மொழியில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'சமனற்ற நீதி" நூல் வெளியீடு நேற்று முன்தினம் (20) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் சிறப்புரையாற்றிய போதே கோசலை மதன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் .பொதுவாக சட்டம் வலியவர்களுக்கானது என்கிற எண்ணம் எம்மிடம் இருக்கிறது. குறிப்பாக பண வசதி படைத்தவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சட்ட ரீதியான பொறுப்புடைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். அவ்வாறு தான் நடக்கிறது என்கிற சிந்தனை எங்களிடம் இருக்கிறது. இந்த விம்பம் ராஜ் ராஜரட்ணத்தின் கைது சம்பவத்தின் மூலமாக உடைக்கப்பட்டிருக்கிறது. வலியவர்களுக்கு எதிராகவும் திட்டமிடப்பட்டு சட்டம் செயற்படுத்தப்படும். அவ்வாறு செயற்படுத்தப்படும்போது வலியவர்களும் பாதிக்கப்படுவார்கள். சட்டங்கள் சமூகத்தை குறிப்பாக சமூகத்தில் உள்ள தனிநபர்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை. இந்த பொறிமுறை அனைவருக்கும் சமனான தன்மையிலே பிரயோகிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தினுடைய அடிப்படை. சட்டத்தின் மூலம் அனைவரும் சமனான பாதுகாப்பை பெறுகிறார்கள் என்பது தான் சட்டத்தினுடைய அடிப்படை. ஆனால் சட்டம் சிலரை திட்டமிட்டு இலக்கு வைத்து பாய்ச்சப்படுவது இலங்கையிலும் நடக்கிறது, அமெரிக்காவிலும் நடக்கிறது என்பதற்கு ராஜ் ராஜரட்ணம் அவர்கள் ஒரு உதாரணம். ஊடகங்கள், ராஜ் ராஜரட்ணத்தை ஒரு குற்றவாளியாக சமூகத்திற்கு எடுத்துச் சென்றிருந்த நிலைப்பாடு சட்ட ரீதியானதா என்று பார்த்தால் இல்லை. அது சட்டத்துக்கு புறம்பானது. ஆகவே சட்டத்துக்கு புறம்பான வகையிலே குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அணுகப்பட்டு அவர்கள் குற்றவாளிகளாக சமூகத்துக்கு சித்திரிக்கப்படுதல் என்பது பாரதூரமான ஒரு மனித உரிமை மீறல் ஊடகங்கள் மூலமாகவும், ஏனைய வழிமுறைகளை பயன்படுத்தியும் குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு நபரை குற்றவாளிகளாக காண்பித்தல் என்பது எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ராஜ் ராஜரட்ணத்தினுடைய வழக்கின் தீர்ப்பு சான்று என அவர் மேலும் தெரிவித்தார்.