• Nov 13 2024

மின் கட்டண திருத்தம் போதாது - மின்சார சபை மீது PUCSL குற்றச்சாட்டு

Chithra / Nov 4th 2024, 2:37 pm
image

 

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த பிரேரணையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

அதில், மின் கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்தது.

எவ்வாறெனினும், இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் பெற்ற இலாபத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சார சபையினால் குறைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண வீதம் போதுமானதாக இல்லை என சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.

மின் கட்டண திருத்தம் போதாது - மின்சார சபை மீது PUCSL குற்றச்சாட்டு  மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.இதன்படி, குறித்த பிரேரணையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.அதில், மின் கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்தது.எவ்வாறெனினும், இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் பெற்ற இலாபத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சார சபையினால் குறைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண வீதம் போதுமானதாக இல்லை என சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.

Advertisement

Advertisement

Advertisement