• Apr 27 2024

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள புடின்!

Tamil nila / Jan 13th 2023, 10:08 pm
image

Advertisement

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய ஜனாதிபதி புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



புடின் ஆற்றும் உரைகளை எழுதிக்கொடுக்கும் பொறுப்பிலிருந்தவரான Abbas Gallyamov என்பவர், புடின் தனது ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார்.  


ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்துள்ள, கவர்ச்சி நடனங்களைக் கண்டுகளிக்கும் வசதியுடைய தனது இரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை செலவிட புடின் திட்டமிட்டிருப்பதாகவும் Abbas தெரிவித்துள்ளார்.



புடின் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒருவரை தனது வாரிசாக அறிவித்துவிட்டு ஓய்வு பெறுவார் என்றும் கூறியுள்ளார் Abbas.


அடுத்த ஜனாதிபதியாக புடினால் தேர்ந்தெடுக்கலாம் என கருதப்படுவபவர்களில், மாஸ்கோ மேயரான Sergey Sobyanin, பிரதமர் Mikhail Mishustin, மற்றும் புடினுடைய நம்பிக்கைக்குரிய பணியாளர்களின் துணைத்தலைவர் பதவி வகிக்கும் Dmitry Kozak ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.



இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், தனது இரகசிய மாளிகையில் அமைதியாக, பாதுகாப்பாக வாழ முடிவு செய்ய இருக்கும் புடின், தனது கடைசிக்காலம் வரை ஒரு செனேட்டராகவே இருக்கும் வகையில் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  


ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள புடின் உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய ஜனாதிபதி புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.புடின் ஆற்றும் உரைகளை எழுதிக்கொடுக்கும் பொறுப்பிலிருந்தவரான Abbas Gallyamov என்பவர், புடின் தனது ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார்.  ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்துள்ள, கவர்ச்சி நடனங்களைக் கண்டுகளிக்கும் வசதியுடைய தனது இரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை செலவிட புடின் திட்டமிட்டிருப்பதாகவும் Abbas தெரிவித்துள்ளார்.புடின் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒருவரை தனது வாரிசாக அறிவித்துவிட்டு ஓய்வு பெறுவார் என்றும் கூறியுள்ளார் Abbas.அடுத்த ஜனாதிபதியாக புடினால் தேர்ந்தெடுக்கலாம் என கருதப்படுவபவர்களில், மாஸ்கோ மேயரான Sergey Sobyanin, பிரதமர் Mikhail Mishustin, மற்றும் புடினுடைய நம்பிக்கைக்குரிய பணியாளர்களின் துணைத்தலைவர் பதவி வகிக்கும் Dmitry Kozak ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், தனது இரகசிய மாளிகையில் அமைதியாக, பாதுகாப்பாக வாழ முடிவு செய்ய இருக்கும் புடின், தனது கடைசிக்காலம் வரை ஒரு செனேட்டராகவே இருக்கும் வகையில் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement