• Oct 27 2024

சீனா செல்லும் புடின் - உற்றுநோக்கும் அமெரிக்கா.!

Tamil nila / Apr 10th 2024, 6:41 pm
image

Advertisement

ரஷ்யாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி இடம்பெறவில்லை என பல நாடுகள் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தன.

தேர்தலுக்கு முன்னர் மொஸ்கோ மன்றத்தில் பேசிய புடின், ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் மேற்கத்தேய நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

மீண்டும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் புடின் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் ஜனாதிபதியாக தெரிவாகி முதல் வெளிநாட்டு பயணமாக விரைவில் சீனா செல்ல உள்ளார்.

புடின் ஜனாதிபதியானது முதல், மொஸ்கோ-பெய்ஜிங் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இருநாட்டு வர்த்தகத்தை பாரிய அளவில் உயர்த்தவும் உத்தேசித்துள்ளார்.

புடினின் பயணத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்டுவரும் கருத்துகள் தொடர்பிலும் உக்ரைன் - ரஷ்ய போர் குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா - ரஷ்யா இடையில் வலுப்பெற்றுவரும் இராஜதந்திர உறவுகளால் ரஷ்யாவை வீழ்த்த அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விஜயம் தொடர்பில் அமெரிக்கா உற்று நோக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சீனா செல்லும் புடின் - உற்றுநோக்கும் அமெரிக்கா. ரஷ்யாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி இடம்பெறவில்லை என பல நாடுகள் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தன.தேர்தலுக்கு முன்னர் மொஸ்கோ மன்றத்தில் பேசிய புடின், ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் மேற்கத்தேய நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார்.மீண்டும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் புடின் ஈடுபட்டுள்ளார். அதனால் அவர் ஜனாதிபதியாக தெரிவாகி முதல் வெளிநாட்டு பயணமாக விரைவில் சீனா செல்ல உள்ளார்.புடின் ஜனாதிபதியானது முதல், மொஸ்கோ-பெய்ஜிங் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், இருநாட்டு வர்த்தகத்தை பாரிய அளவில் உயர்த்தவும் உத்தேசித்துள்ளார்.புடினின் பயணத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்டுவரும் கருத்துகள் தொடர்பிலும் உக்ரைன் - ரஷ்ய போர் குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனா - ரஷ்யா இடையில் வலுப்பெற்றுவரும் இராஜதந்திர உறவுகளால் ரஷ்யாவை வீழ்த்த அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விஜயம் தொடர்பில் அமெரிக்கா உற்று நோக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement