• May 18 2024

தொடருந்து திணைக்கள பேச்சுவார்த்தை - கிளம்பியுள்ள புதிய பிரச்சினை

Chithra / Dec 10th 2022, 3:49 pm
image

Advertisement


தொடருந்து திணைக்களத்தை, அதிகார சபையாக நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தமது சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதுவரையில், தெரிவுசெய்யப்பட்ட சில சங்கங்களுக்கு மாத்திரமே, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் எச் ஆர் பீ உதயசிறி தெரிவித்துள்ளார்.

தொடருந்து திணைக்களத்தை, அதிகார சபையாக நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தொடருந்து பொதுமுகாமையாளர் அலுவலகத்தின் மூலம் தகவல் கிடைத்தது.

இதற்காக சில தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமது சங்கத்தை தவிர்த்து ஏனைய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமானால் அது நகைப்புக்குரிய விடயமாகும்.

அவ்வாறு பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க தாம் இடமளிக்கப் போவதில்லை என தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் எச் ஆர் பீ உதயசிறி குறிப்பிட்டுள்ளார்.


தொடருந்து திணைக்கள பேச்சுவார்த்தை - கிளம்பியுள்ள புதிய பிரச்சினை தொடருந்து திணைக்களத்தை, அதிகார சபையாக நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தமது சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இதுவரையில், தெரிவுசெய்யப்பட்ட சில சங்கங்களுக்கு மாத்திரமே, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் எச் ஆர் பீ உதயசிறி தெரிவித்துள்ளார்.தொடருந்து திணைக்களத்தை, அதிகார சபையாக நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தொடருந்து பொதுமுகாமையாளர் அலுவலகத்தின் மூலம் தகவல் கிடைத்தது.இதற்காக சில தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமது சங்கத்தை தவிர்த்து ஏனைய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமானால் அது நகைப்புக்குரிய விடயமாகும்.அவ்வாறு பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க தாம் இடமளிக்கப் போவதில்லை என தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் எச் ஆர் பீ உதயசிறி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement