• Sep 20 2024

மஸ்கெலியாவில் தொடரும் மழை - 4 குடும்பங்கள் பாதிப்பு! samugammedia

Tamil nila / Jul 5th 2023, 7:06 pm
image

Advertisement

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பெருந் தோட்டத்தில் பாரிய மரம் சரிந்ததால் 4 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட எமலீனா பிரிவில் இன்று மதியம் 2.மணிக்கு கடும் மழையுடன் வீசிய கடும் கன்றின் போது தொழிலாளர்கள் குடியிருப்பு மீது சுமார் 200 அடி உயரம் கொண்ட கருப்பன்டைன் மரம் சரிந்ததால் 4 குடும்பங்களை சார்ந்த 20 பேர் நிர்கதிக்குள்ளானார்கள்.


அங்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து பாரிய மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.


மேலும் அப் பகுதியில் பாரிய மரங்கள் உள்ளதால் நிர்வாகம் நிர்கதிக்குள்ளானவர்களை தனியாக தோட்ட குடியிருப்பு ஒன்றில் தற்காலிக குடியிருப்பு ஒன்றில் தங்கவைத்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மரம் சரிந்த போது குறிப்பிட்ட குடியிருப்பில் இருந்த 70 வயது சிறு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏனைய அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள்.


மஸ்கெலியாவில் தொடரும் மழை - 4 குடும்பங்கள் பாதிப்பு samugammedia மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பெருந் தோட்டத்தில் பாரிய மரம் சரிந்ததால் 4 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட எமலீனா பிரிவில் இன்று மதியம் 2.மணிக்கு கடும் மழையுடன் வீசிய கடும் கன்றின் போது தொழிலாளர்கள் குடியிருப்பு மீது சுமார் 200 அடி உயரம் கொண்ட கருப்பன்டைன் மரம் சரிந்ததால் 4 குடும்பங்களை சார்ந்த 20 பேர் நிர்கதிக்குள்ளானார்கள்.அங்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிசார் தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து பாரிய மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர்.மேலும் அப் பகுதியில் பாரிய மரங்கள் உள்ளதால் நிர்வாகம் நிர்கதிக்குள்ளானவர்களை தனியாக தோட்ட குடியிருப்பு ஒன்றில் தற்காலிக குடியிருப்பு ஒன்றில் தங்கவைத்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.மரம் சரிந்த போது குறிப்பிட்ட குடியிருப்பில் இருந்த 70 வயது சிறு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏனைய அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement