• Sep 08 2024

ரணிலும் மைத்திரியும் பொறுப்பு கூறவேண்டும்: யாருக்கும் அச்சமடையமாட்டோம்- சாகர! SamugamMedia

Sharmi / Feb 21st 2023, 11:25 am
image

Advertisement

தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சியின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.

மாகாண சபையின் நிலைமை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தோற்றம் பெற இடமளிக்க முடியாது. அடுத்த வருடம் தேர்தல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கருத்து கவலைக்குரியது.

தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டும், ஆணைக்குழுவிற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் மாத்திரம் தான் அந்த அதிகாரம் உண்டு.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது, சட்டத்திற்கு முரணாக தேர்தலை பிற்போட எவரேனும் முயற்சித்தால் கட்சி என்ற ரீதியில் முதலாவதாக நாங்கள் தான் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

முறையாக தேர்தலை நடத்த வேண்டுமாயின் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என்பதை குறிப்பிடுவதையிட்டு அச்சமடைய தேவையில்லை,

அதுவே உண்மை. நல்லாட்சி அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஒருபோதும் மறுக்கமாட்டோம் என்றார்.

ரணிலும் மைத்திரியும் பொறுப்பு கூறவேண்டும்: யாருக்கும் அச்சமடையமாட்டோம்- சாகர SamugamMedia தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சியின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.மாகாண சபையின் நிலைமை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தோற்றம் பெற இடமளிக்க முடியாது. அடுத்த வருடம் தேர்தல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கருத்து கவலைக்குரியது.தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டும், ஆணைக்குழுவிற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் மாத்திரம் தான் அந்த அதிகாரம் உண்டு.தேர்தலை பிற்போட வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது, சட்டத்திற்கு முரணாக தேர்தலை பிற்போட எவரேனும் முயற்சித்தால் கட்சி என்ற ரீதியில் முதலாவதாக நாங்கள் தான் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.முறையாக தேர்தலை நடத்த வேண்டுமாயின் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என்பதை குறிப்பிடுவதையிட்டு அச்சமடைய தேவையில்லை, அதுவே உண்மை. நல்லாட்சி அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஒருபோதும் மறுக்கமாட்டோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement