• May 12 2024

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கிறார் ரணில் - குற்றம் சுமத்திய பீரிஸ்!

Sharmi / Jan 31st 2023, 12:28 pm
image

Advertisement

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிப்பதாக டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

13 ஆவது திருத்தத்திற்கு மகா சங்கத்தினர் உட்பட தெற்கு அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உண்மை நோக்கம் காணப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில் இல்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி தோற்றுவிக்கிறார் என ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கல் காணப்படுகிறது. மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். இனப்பிரச்சினைக்கு உண்மையில் தீர்வு காண வேண்டுமாயின் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கிறார் ரணில் - குற்றம் சுமத்திய பீரிஸ் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிப்பதாக டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். 13 ஆவது திருத்தத்திற்கு மகா சங்கத்தினர் உட்பட தெற்கு அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உண்மை நோக்கம் காணப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில் இல்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி தோற்றுவிக்கிறார் என ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கல் காணப்படுகிறது. மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். இனப்பிரச்சினைக்கு உண்மையில் தீர்வு காண வேண்டுமாயின் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement