• Jun 28 2024

அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கஞ்சா செய்கை - அமைச்சரவை பத்திரம் விரைவில்.!

Sharmi / Jan 31st 2023, 12:03 pm
image

Advertisement

கஞ்சா இறக்குமதிக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் முன்வைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுக்கு மூலிகை மருந்துகளை இறக்குமதி செய்யும் போது மூலிகைசார் கஞ்சா இறக்குமதிக்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதியை கட்டுப்படுத்தி மூலிகை செடிகளை நாட்டில் வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் கஞ்சா செய்கைக்கு தேவையான காணிகளை வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கஞ்சா செய்கை - அமைச்சரவை பத்திரம் விரைவில். கஞ்சா இறக்குமதிக்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் முன்வைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.உள்நாட்டுக்கு மூலிகை மருந்துகளை இறக்குமதி செய்யும் போது மூலிகைசார் கஞ்சா இறக்குமதிக்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இறக்குமதியை கட்டுப்படுத்தி மூலிகை செடிகளை நாட்டில் வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் கஞ்சா செய்கைக்கு தேவையான காணிகளை வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement