• Mar 17 2025

Thansita / Mar 16th 2025, 10:38 pm
image

பட்டலந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களில் தனக்கு தொடர்பு இல்லை எனவும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் அறிக்கையொன்றை 25 ஆண்டுகளின் பின்னர் பாராளுமன்றில் விவாதிக்கும் சம்பிரதாயம் இந்த நாட்டிலோ அல்லது வேறு எந்தவொரு பாராளுமன்றத்திலும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

தொடர்ந்து தெரிவிக்கையில் 

அறிக்கையின் தீர்மானங்களில் என்னைப்பற்றி கூறப்பட்டுள்ள விடயம் என்னவெனில் அமைச்சர் என்ற வகையில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு வீடுகளை வழங்கியமை சரியில்லை என்பதாகும்.

பொலிஸ்மா அதிபரிடம் வீடுகளை ஒப்படைத்து அதனூடாக அதிகாரிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும் என்பதே அதில் குறிப்பிடப்பட்டுள்ள முறையான நடவடிக்கையாகும் .

இந்த விடயத்தினாலேயே நானும் நளினும் பொறுப்புக்கு வரவேண்டியவர்காளாக மறைமுகமாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்தவொரு விடயத்திலும் நான் தொடர்பு படவில்லை. 

மக்கள் விடுதலை முன்னனி 1988 காலப்பகுதியல் நடத்திய பல பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையின் தீர்மானங்களில் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்

 மக்கள் விடுதலை முன்னியால் நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையில் 3ம் அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வரலாறும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது 

இதைத்தவிர வேறு எந்த குற்றச்சாட்டும் என்னோடு தொடர்பு பட்டதல்ல.  இந்த அறிக்கையை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் 

இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த அறிக்கையின் ஊடாக குறுகிய அரசியல் லாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்படவில்லை என்பதை கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

பட்டலந்த அறிக்கையை நிராகரித்த ரணில் பட்டலந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களில் தனக்கு தொடர்பு இல்லை எனவும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.மேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் அறிக்கையொன்றை 25 ஆண்டுகளின் பின்னர் பாராளுமன்றில் விவாதிக்கும் சம்பிரதாயம் இந்த நாட்டிலோ அல்லது வேறு எந்தவொரு பாராளுமன்றத்திலும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்தொடர்ந்து தெரிவிக்கையில் அறிக்கையின் தீர்மானங்களில் என்னைப்பற்றி கூறப்பட்டுள்ள விடயம் என்னவெனில் அமைச்சர் என்ற வகையில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு வீடுகளை வழங்கியமை சரியில்லை என்பதாகும்.பொலிஸ்மா அதிபரிடம் வீடுகளை ஒப்படைத்து அதனூடாக அதிகாரிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும் என்பதே அதில் குறிப்பிடப்பட்டுள்ள முறையான நடவடிக்கையாகும் .இந்த விடயத்தினாலேயே நானும் நளினும் பொறுப்புக்கு வரவேண்டியவர்காளாக மறைமுகமாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு எந்தவொரு விடயத்திலும் நான் தொடர்பு படவில்லை. மக்கள் விடுதலை முன்னனி 1988 காலப்பகுதியல் நடத்திய பல பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையின் தீர்மானங்களில் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார் மக்கள் விடுதலை முன்னியால் நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையில் 3ம் அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வரலாறும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது இதைத்தவிர வேறு எந்த குற்றச்சாட்டும் என்னோடு தொடர்பு பட்டதல்ல.  இந்த அறிக்கையை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த அறிக்கையின் ஊடாக குறுகிய அரசியல் லாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்படவில்லை என்பதை கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement