• Nov 23 2024

ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும்! சம்பிக்க கோரிக்கை

Chithra / Sep 29th 2024, 12:06 pm
image


சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சி  கூட்டணி அமைக்க விரும்பினால், ரணில் விக்ரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்க வேண்டுமா என்பதை ஐக்கிய மக்கள் சக்தி தான் தீர்மானிக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளை குறிப்பிட்டு, அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் முழுமையாக நம்பவில்லை.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஜனாதிபதி திசாநாயக்க ஆதரவளிக்க நான் தயங்கமாட்டேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடி, கடன் மறுசீரமைப்பை இறுதி செய்வது, திருப்பிச் செலுத்தும் சுமைகள் அதிகரிப்பதால், மேலும் சவால்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சமநிலைப்படுத்தி, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பேணுவதற்கு ஜனாதிபதி திசாநாயக்க நன்றாகச் செயற்படுவார் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் சம்பிக்க கோரிக்கை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சி  கூட்டணி அமைக்க விரும்பினால், ரணில் விக்ரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.இவ்வாறானதொரு சூழ்நிலையில் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்க வேண்டுமா என்பதை ஐக்கிய மக்கள் சக்தி தான் தீர்மானிக்க வேண்டும் என அவர் கூறினார்.இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளை குறிப்பிட்டு, அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் முழுமையாக நம்பவில்லை.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஜனாதிபதி திசாநாயக்க ஆதரவளிக்க நான் தயங்கமாட்டேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடி, கடன் மறுசீரமைப்பை இறுதி செய்வது, திருப்பிச் செலுத்தும் சுமைகள் அதிகரிப்பதால், மேலும் சவால்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சமநிலைப்படுத்தி, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பேணுவதற்கு ஜனாதிபதி திசாநாயக்க நன்றாகச் செயற்படுவார் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement