• May 18 2024

ரணில் வருகை ஐ.நாவுக்கு அவமானம்..! நியூயோர்கில் பாரிய எதிர்ப்புப் போராட்டம்..!samugammedia

Tamil nila / Sep 21st 2023, 11:31 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றிலில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில்  பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 



ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில் நடந்துவரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் காரணம் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மிகவும் ஆக்ரோசமாக ரணிலே வெளியேறு,.. காணாமல் ஆக்கப்பட்வர்கள் எங்கே? சிங்கள தேசமே இனப்படு கொலை செய்தது, ரணில் ஐ.நாவுக்கு வருவது ஐ.நாவுக்கு அவமானம்.  இலங்கையை சர்வதேச நீதிமன்றில்  நிறுத்து. தியாகி திலீபனின் ஊர்தியை சிங்கக் கொடி கொண்டு அடித்து நொருக்கிய சிங்கள பொளத்த இனவெறி அரசு, ரணில் அரசு போன்ற முழக்கங்கள் போராட்டக்கார்ர்களால் உரத்து ஒலித்தமை குறிப்பிடத்தக்கது. 


பிரதமர் உருத்திரகுமாரன்  கருத்து தெரிவிக்கையில்,, 

நிரந்தர அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன்,  இலங்கையின் உண்மைக்கும், நீதிக்குமான ஆனைக்குழு தமிழர்களை ஏமாற்றுவதற்கான சதித்திட்டமே என்று கூறினார் மேலும் பௌத்த மயமாக்கால் , சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றில் ஐ. நா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 



இந்தப் போராட்டத்தை ஐ.நா அதிகாரிகளும், வெளிநாட்டு இராஐதந்திரிகள்  மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் அவதானித்ததுடன் புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ரணில் வருகை ஐ.நாவுக்கு அவமானம். நியூயோர்கில் பாரிய எதிர்ப்புப் போராட்டம்.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றிலில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில்  பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில் நடந்துவரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் காரணம் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மிகவும் ஆக்ரோசமாக ரணிலே வெளியேறு,. காணாமல் ஆக்கப்பட்வர்கள் எங்கே சிங்கள தேசமே இனப்படு கொலை செய்தது, ரணில் ஐ.நாவுக்கு வருவது ஐ.நாவுக்கு அவமானம்.  இலங்கையை சர்வதேச நீதிமன்றில்  நிறுத்து. தியாகி திலீபனின் ஊர்தியை சிங்கக் கொடி கொண்டு அடித்து நொருக்கிய சிங்கள பொளத்த இனவெறி அரசு, ரணில் அரசு போன்ற முழக்கங்கள் போராட்டக்கார்ர்களால் உரத்து ஒலித்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் உருத்திரகுமாரன்  கருத்து தெரிவிக்கையில்,, நிரந்தர அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன்,  இலங்கையின் உண்மைக்கும், நீதிக்குமான ஆனைக்குழு தமிழர்களை ஏமாற்றுவதற்கான சதித்திட்டமே என்று கூறினார் மேலும் பௌத்த மயமாக்கால் , சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றில் ஐ. நா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தப் போராட்டத்தை ஐ.நா அதிகாரிகளும், வெளிநாட்டு இராஐதந்திரிகள்  மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்களும் அவதானித்ததுடன் புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement