• May 09 2024

மாப்புவின் மப்பினால் பறந்த கதிரைகள்..! நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பு!SamugamMedia

Sharmi / Feb 16th 2023, 12:02 pm
image

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் சேலம்பாக்கம் இடையே மாம்பாக்கம் பகுதியுள்ள விக்னேஷ் மஹாலில் சுஜித் என்பவருக்கும் தையூரினை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் இடம்பெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன் தினம் வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. பெண் வீட்டாரும், மாப்பிளை வீட்டாரும் சூழ வரவேற்பு நிகழ்ச்சி தடல்புடலாக இடம்பெற்றுள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க, அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற தலைவர்களென கலந்து கொண்டு மணமக்களினை ஆசிர்வதித்துள்ளனர்.

அனைவருடனும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், மணமகளுடன் போதையில் சேட்டையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி பெண் வீட்டார் வரவேற்பு நிகழ்வினை இடைநிறுத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் மாப்பிள்ளையிடமும், அவரது பெற்றோரிடமும் விசாரணை செய்ய மாப்பிளை சுஜித் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பெண் வீட்டார் மணமேடையில் புகைப்படமெடுக்கும் போது தங்கள் உறவினருடன் தகராறு செய்த ஒழுக்கமற்ற மாப்பிளை வேண்டாம் என கூறியதுடன் தாம் அணிவித்த சங்கிலி,மோதிரம் போன்ற தங்க நகைகளையும் திரும்ப பெற்றுள்ளனர்.

இதனால் கோபமடைந்த மாப்பிளை சுஜித் மண்டபத்திலுள்ள கதிரைகளினை தூக்கி வீசியதால் பெண்ணின் வீட்டார் கலவரம் செய்துள்ளனர்.

இவ்வாறாக மறுதினம் இடம்பெறவிருந்த திருமணம் முதல் நாள் நிறுத்தப்பட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாப்புவின் மப்பினால் பறந்த கதிரைகள். நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்புSamugamMedia செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் சேலம்பாக்கம் இடையே மாம்பாக்கம் பகுதியுள்ள விக்னேஷ் மஹாலில் சுஜித் என்பவருக்கும் தையூரினை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் இடம்பெற நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன் தினம் வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. பெண் வீட்டாரும், மாப்பிளை வீட்டாரும் சூழ வரவேற்பு நிகழ்ச்சி தடல்புடலாக இடம்பெற்றுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க, அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற தலைவர்களென கலந்து கொண்டு மணமக்களினை ஆசிர்வதித்துள்ளனர்.அனைவருடனும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், மணமகளுடன் போதையில் சேட்டையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி பெண் வீட்டார் வரவேற்பு நிகழ்வினை இடைநிறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் மாப்பிள்ளையிடமும், அவரது பெற்றோரிடமும் விசாரணை செய்ய மாப்பிளை சுஜித் மன்னிப்பு கேட்டுள்ளார். பெண் வீட்டார் மணமேடையில் புகைப்படமெடுக்கும் போது தங்கள் உறவினருடன் தகராறு செய்த ஒழுக்கமற்ற மாப்பிளை வேண்டாம் என கூறியதுடன் தாம் அணிவித்த சங்கிலி,மோதிரம் போன்ற தங்க நகைகளையும் திரும்ப பெற்றுள்ளனர்.இதனால் கோபமடைந்த மாப்பிளை சுஜித் மண்டபத்திலுள்ள கதிரைகளினை தூக்கி வீசியதால் பெண்ணின் வீட்டார் கலவரம் செய்துள்ளனர்.இவ்வாறாக மறுதினம் இடம்பெறவிருந்த திருமணம் முதல் நாள் நிறுத்தப்பட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement