• Nov 26 2024

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார்- ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு...!

Sharmi / Mar 1st 2024, 12:36 pm
image

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கத் தயார் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,


இனவாதம், மதவாதம் தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளும் துரித அபிவிருத்தியை அடைந்துள்ளன எனவும்,   இனவாதமும் , மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் மதத் தலைவர்கள் தமது பதவிகளில் நீடிப்பதற்கும் குறுகிய வழியாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  நீண்டகால  கசப்பான அனுபவமானது நாட்டைப் பயங்கரமான போருக்கு இழுத்துச் சென்றதையும் நினைவு கூர்ந்துள்ளார்.


எனவே, நாட்டையும் நமது மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


மேலும், மதத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் உள்ள தொடர்பை நாங்கள் நன்கு அறிவோம்.


இனவாதம், மதவாதம்  போன்றவற்றில் எங்களுக்கு அனுபவம் உண்டு. இதனால்தான் பயங்கரமான போரை எதிர்கொண்டோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் சகவாழ்வு தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.


சிங்கப்பூரில் சாதி, மதம் கிடையாது. சிங்கப்பூர் பன்மொழி பேசும் நாடாக இருந்தாலும், இன்று சிங்கப்பூர் வேகமாக வளரும் நாடாக உள்ளது.


கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பௌத்த மதத் தலைவர்களும் பல தமிழ்த் தலைவர்களும் இமயமலைப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.


அந்த அறிக்கையின் பிரகாரம் செயற்பட்டு வருகிறோம். தற்போது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான கடைசி  பகுதியில் இருக்கிறோம்.


குறிப்பாக, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது குறித்து கலந்துரையாடி வருகின்றோம்.


மீதமுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். காணி பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். அனைத்து தரப்பினரையும் அழைத்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என நம்புகிறோம்.

 

அத்துடன் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில்  தமிழ்  கட்சிப் பிரதிநிதிகளை  சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளேன்.


பாதுகாப்பு தரப்பினருடன் பேசி மேலும் காணிகளை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.


அதிகாரப் பகிர்வின் 3வது அட்டவணையின் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதே இங்கு அடிப்படை கோரிக்கையாக உள்ளது.


காவல்துறையின் அதிகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை.  நிலச் சட்டத்தை முன்வைக்க வேண்டும். மேலும் 3வது பட்டியலில்  உள்ள மற்ற விடயங்களை  வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.


இது தொடர்பில், ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு பாராளுமன்றில் உள்ள கட்சிகளுடன் இணக்கம் எட்டப்பட்டு  வருவதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.


பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார்- ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு. பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கத் தயார் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,இனவாதம், மதவாதம் தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளும் துரித அபிவிருத்தியை அடைந்துள்ளன எனவும்,   இனவாதமும் , மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் மதத் தலைவர்கள் தமது பதவிகளில் நீடிப்பதற்கும் குறுகிய வழியாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  நீண்டகால  கசப்பான அனுபவமானது நாட்டைப் பயங்கரமான போருக்கு இழுத்துச் சென்றதையும் நினைவு கூர்ந்துள்ளார்.எனவே, நாட்டையும் நமது மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அரசாங்கம் பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.மேலும், மதத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் உள்ள தொடர்பை நாங்கள் நன்கு அறிவோம்.இனவாதம், மதவாதம்  போன்றவற்றில் எங்களுக்கு அனுபவம் உண்டு. இதனால்தான் பயங்கரமான போரை எதிர்கொண்டோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் சகவாழ்வு தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.சிங்கப்பூரில் சாதி, மதம் கிடையாது. சிங்கப்பூர் பன்மொழி பேசும் நாடாக இருந்தாலும், இன்று சிங்கப்பூர் வேகமாக வளரும் நாடாக உள்ளது.கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பௌத்த மதத் தலைவர்களும் பல தமிழ்த் தலைவர்களும் இமயமலைப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.அந்த அறிக்கையின் பிரகாரம் செயற்பட்டு வருகிறோம். தற்போது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான கடைசி  பகுதியில் இருக்கிறோம்.குறிப்பாக, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது குறித்து கலந்துரையாடி வருகின்றோம்.மீதமுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். காணி பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். அனைத்து தரப்பினரையும் அழைத்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என நம்புகிறோம். அத்துடன் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில்  தமிழ்  கட்சிப் பிரதிநிதிகளை  சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளேன்.பாதுகாப்பு தரப்பினருடன் பேசி மேலும் காணிகளை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.அதிகாரப் பகிர்வின் 3வது அட்டவணையின் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதே இங்கு அடிப்படை கோரிக்கையாக உள்ளது.காவல்துறையின் அதிகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை.  நிலச் சட்டத்தை முன்வைக்க வேண்டும். மேலும் 3வது பட்டியலில்  உள்ள மற்ற விடயங்களை  வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.இது தொடர்பில், ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு பாராளுமன்றில் உள்ள கட்சிகளுடன் இணக்கம் எட்டப்பட்டு  வருவதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement