• Jan 09 2025

தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்..! மல்லாவியில் கையெழுத்து வேட்டை

Chithra / Jan 2nd 2025, 3:40 pm
image



நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு - மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் இன்று (02) இடம்பெற்றது.

பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மல்லாவி  நகரில் குறித்த  கையெழுத்துப் போராட்டம்  இடம்பெற்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்  அரசியல் கைதிகளையும்,புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும்  புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த  கையெழுத்துப் போராட்டம்  இடம்பெற்றது.

இதில் மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள், மகஜராக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.


தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள். மல்லாவியில் கையெழுத்து வேட்டை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு - மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் இன்று (02) இடம்பெற்றது.பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மல்லாவி  நகரில் குறித்த  கையெழுத்துப் போராட்டம்  இடம்பெற்றது.பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்  அரசியல் கைதிகளையும்,புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும்  புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த  கையெழுத்துப் போராட்டம்  இடம்பெற்றது.இதில் மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள், மகஜராக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement