• Jun 26 2024

பாலர் பாடசாலையில் மதச் செயற்பாடு - பிரதேச செயலகத்தின் தலையிட்டால் நிறுத்தம்! SamugamMedia

Chithra / Mar 8th 2023, 11:10 am
image

Advertisement

வலி. வடக்கு மீள்குடியேற்ற கிராமமான நல்லிணக்க புரத்தில் உள்ள பாலர் பாடசாலையில்  ஒன்றில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் கிறிஸ்தவ மதச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு  எடுத்த முயற்சிகள் பிரதேச செயலகத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

வலி. வடக்கு மீள்குடியேற்ற கிராமமான நல்லிணக்கபுரத்தில் இராணுவத்தினரால் முன்பள்ளி மாணவர்களுக்கான கட்டடத் தொகுதி  அமைக்கப்பட்டு முன்பள்ளிச் செயற்பாடுகள் இடம் பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த முன்பள்ளியை மதக் குழு ஒன்று தமது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக முன் பள்ளியில் மாணவர்கள் குறைவு என்பதை காரணம் காட்டி தமது செயற்பாடுகளை குறித்த முன் பள்ளியில் ஊக்கிவிக்க ஆரம்பித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் பிரதே மக்கள் யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவசிறி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன் நிலையில் பாலர் பாடசாலையை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக மத செயற்பாட்டுக் குழுவினரை குறித்த முன்பள்ளியின் இருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


பாலர் பாடசாலையில் மதச் செயற்பாடு - பிரதேச செயலகத்தின் தலையிட்டால் நிறுத்தம் SamugamMedia வலி. வடக்கு மீள்குடியேற்ற கிராமமான நல்லிணக்க புரத்தில் உள்ள பாலர் பாடசாலையில்  ஒன்றில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் கிறிஸ்தவ மதச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு  எடுத்த முயற்சிகள் பிரதேச செயலகத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,வலி. வடக்கு மீள்குடியேற்ற கிராமமான நல்லிணக்கபுரத்தில் இராணுவத்தினரால் முன்பள்ளி மாணவர்களுக்கான கட்டடத் தொகுதி  அமைக்கப்பட்டு முன்பள்ளிச் செயற்பாடுகள் இடம் பெற்று வந்தது.இந்நிலையில் குறித்த முன்பள்ளியை மதக் குழு ஒன்று தமது செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக முன் பள்ளியில் மாணவர்கள் குறைவு என்பதை காரணம் காட்டி தமது செயற்பாடுகளை குறித்த முன் பள்ளியில் ஊக்கிவிக்க ஆரம்பித்தனர்.குறித்த விடயம் தொடர்பில் பிரதே மக்கள் யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவசிறி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இன் நிலையில் பாலர் பாடசாலையை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக மத செயற்பாட்டுக் குழுவினரை குறித்த முன்பள்ளியின் இருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement