• Nov 25 2024

மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி - மகஜர் கையளிப்பு

Tharmini / Nov 21st 2024, 6:06 pm
image

ஐம்பது வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாத மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி,

பொதுமக்களால் தென்மராட்சி பிரதேச செயலாளர் மாற்றும் வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் இன்றையதினம் மகஜர் கையளிக்கப்பட்டது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கான மகஜர் கைதடியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் நேரடியாகவும்,

தென்மராட்சி பிரதேச செயலருக்கான மகஜர் கடிதம் ஊடாகவும் 

இன்று (21) அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. 

கையளிக்கப்பட்ட மகஜரில் , சகல அரச திணைக்களங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடமும் குறித்த வீதி தொடர்பில் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை.

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் தற்போது மழைக்காலம் ஆரம்பித்த நிலையில் பாதிப்புகளை எதிர் கொண்டு வருகின்றனர். 

தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் சாவகச்சேரி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என கூறிக்கொள்ளும்,

சில உத்தியோகத்தர்கள் மூன்று மீற்றர் அகலமான தற்கால பாவனைக்குரிய பாதையை ஒரு கிலோமீற்றர் போடுவதற்கு அளந்து சென்றனர்.

ஆனால் எமது பாதை புனரமைப்புக்கு வந்த ஐ ரோட் திட்ட பணம் என்ன நடந்தது என்று கேள்வி மக்களிடம் உள்ளது.

ஆகவே தயவுசெய்து எமது பிரதேசத்துக்கு பொறுப்பாளர் என்ற வகையில் இதற்கு தாங்கள் நிரந்தர தீர்வை முன்வைக்க வேண்டும் - என்றுள்ளது.

மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி - மகஜர் கையளிப்பு ஐம்பது வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாத மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரி, பொதுமக்களால் தென்மராட்சி பிரதேச செயலாளர் மாற்றும் வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் இன்றையதினம் மகஜர் கையளிக்கப்பட்டது.வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கான மகஜர் கைதடியில் உள்ள அவருடைய அலுவலகத்தில் நேரடியாகவும், தென்மராட்சி பிரதேச செயலருக்கான மகஜர் கடிதம் ஊடாகவும் இன்று (21) அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. கையளிக்கப்பட்ட மகஜரில் , சகல அரச திணைக்களங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடமும் குறித்த வீதி தொடர்பில் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை.பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் தற்போது மழைக்காலம் ஆரம்பித்த நிலையில் பாதிப்புகளை எதிர் கொண்டு வருகின்றனர். தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் சாவகச்சேரி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என கூறிக்கொள்ளும், சில உத்தியோகத்தர்கள் மூன்று மீற்றர் அகலமான தற்கால பாவனைக்குரிய பாதையை ஒரு கிலோமீற்றர் போடுவதற்கு அளந்து சென்றனர்.ஆனால் எமது பாதை புனரமைப்புக்கு வந்த ஐ ரோட் திட்ட பணம் என்ன நடந்தது என்று கேள்வி மக்களிடம் உள்ளது. ஆகவே தயவுசெய்து எமது பிரதேசத்துக்கு பொறுப்பாளர் என்ற வகையில் இதற்கு தாங்கள் நிரந்தர தீர்வை முன்வைக்க வேண்டும் - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement