கருவலகஸ்வெவ பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்த யானை மீட்பு!

கருவலகஸ்வெவ பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்த யானையினை பெகோ இயந்திரத்தின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டு சரணாலயத்திற்குள் விரட்டபட்டது.

புத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மஹகோன்வெவ பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானையொன்று பாதுகாப்பற்ற முறையில் வெட்டப்பட்ட கிணற்றினுல் வீழ்ந்துள்ளதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் கருவகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்குச் சென்று கிணற்றுக்குள் வீழ்ந்த யானையை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பெக்கோ இயந்திர உதவியுடன் கிணற்றுக்குள் வீழ்ந்த யானையை கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் உயிருடன் மீட்டு பின்னர் தப்போவ சரணாலயத்திற்குள் விரட்டியதாக தெரிவித்தனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை