• Jun 24 2024

மீண்டும் உயர்வா... தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 3:22 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும், விற்பனை விலை 328.60 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்ப தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளதன் காரணமாக தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. 

நேற்றைய தினம் தங்கத்தின் விலை வேகமாக குறைந்துள்ளது. டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கப் பவுணிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினங்களை விட நேற்றையதினம் தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைந்திருந்தது. 

இந்த நிலையில், நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது,

அதன்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 177,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் உயர்வா. தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் SamugamMedia அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும், விற்பனை விலை 328.60 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்ப தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளதன் காரணமாக தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை வேகமாக குறைந்துள்ளது. டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கப் பவுணிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த தினங்களை விட நேற்றையதினம் தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைந்திருந்தது. இந்த நிலையில், நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது,அதன்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 177,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement