• Nov 28 2024

அதிக தொகைக்கு ஏலம் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரிஷப் பந்த்!

Tamil nila / Nov 24th 2024, 7:30 pm
image

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்று இந்திய வீரர் ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் இன்று மதியம் விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது.

இதில் கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

அவரை வாங்க பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே கடுமையான ஏலம் நடைபெற்றது. இறுதியில் கையில் அதிக தொகையை வைத்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியது.

அதனைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது

அதிக தொகைக்கு ஏலம் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரிஷப் பந்த் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்று இந்திய வீரர் ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் இன்று மதியம் விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது.இதில் கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.அவரை வாங்க பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே கடுமையான ஏலம் நடைபெற்றது. இறுதியில் கையில் அதிக தொகையை வைத்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியது.அதனைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த்.கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement