• Jun 02 2024

பரீட்சகர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு! வெளியான விசேட அறிவித்தல்! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 7:03 am
image

Advertisement

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக ஆசிரியர்களிடம் இருந்து மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுக்காக சுமார் 15,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர், ஆனால் இராசாயனவியல், பெளதீகவியல் மற்றும் ஒருங்கிணைந்த கணிதம் போன்ற பாடங்களை மதிப்பீடு செய்ய போதிய அளவிலான ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளனர்.

நாளாந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து, மேலும் பல ஆசிரியர்கள் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சகர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு வெளியான விசேட அறிவித்தல் SamugamMedia கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக ஆசிரியர்களிடம் இருந்து மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.விடைத்தாள் மதிப்பீட்டுக்காக சுமார் 15,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர், ஆனால் இராசாயனவியல், பெளதீகவியல் மற்றும் ஒருங்கிணைந்த கணிதம் போன்ற பாடங்களை மதிப்பீடு செய்ய போதிய அளவிலான ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளனர்.நாளாந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து, மேலும் பல ஆசிரியர்கள் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement