• May 07 2024

ஸ்டிக்கர் இல்லாத மது போத்தல்கள் விற்பனை - மதுபான கடைகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்..! samugammedia

Chithra / Jun 25th 2023, 1:13 pm
image

Advertisement

ஸ்டிக்கர் இல்லாமல் மதுபானம் விற்கும் கடைகளின் மதுபான உரிமத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்யும் உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசியப் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் திட்டமிடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இத்தகைய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

பாரியளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டிய வரிகளை விரைவாக அறவிடுமாறு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம பணிப்புரை விடுத்துள்ளார்.

பல வருடங்களாக கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

மதுவின் விலை உயர்வினால் மட்டும் வருமானம் குறைந்துள்ளதை அவதானிக்காமல், இந்நாட்டில் உள்ள பாரிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்படுவதிலும் கவனம் செலுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கை கலால் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிறுவனம் 110 வருட வரலாற்றைக் கொண்ட நிறுவனம் என்றும், இந்த நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்படாமல் இருப்பது பலவீனம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மதுபான ஆலைகளில் உள்ள ஒவ்வொரு மதுபான போத்தலிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் அமைப்பை தயார் செய்ய தேசியப் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் திட்டமிடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது. 

ஸ்டிக்கர் இல்லாத மது போத்தல்கள் சந்தையில் வெளியாகும் போக்கு காணப்படுவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. 

இதன் காரணமாக, இந்த விவகாரத்தை சரிபார்ப்பதற்கு முறையான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது .


ஸ்டிக்கர் இல்லாத மது போத்தல்கள் விற்பனை - மதுபான கடைகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல். samugammedia ஸ்டிக்கர் இல்லாமல் மதுபானம் விற்கும் கடைகளின் மதுபான உரிமத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்யும் உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேசியப் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் திட்டமிடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இத்தகைய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.பாரியளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டிய வரிகளை விரைவாக அறவிடுமாறு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம பணிப்புரை விடுத்துள்ளார்.பல வருடங்களாக கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மதுவின் விலை உயர்வினால் மட்டும் வருமானம் குறைந்துள்ளதை அவதானிக்காமல், இந்நாட்டில் உள்ள பாரிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்படுவதிலும் கவனம் செலுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், இலங்கை கலால் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிறுவனம் 110 வருட வரலாற்றைக் கொண்ட நிறுவனம் என்றும், இந்த நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்படாமல் இருப்பது பலவீனம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை மதுபான ஆலைகளில் உள்ள ஒவ்வொரு மதுபான போத்தலிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் அமைப்பை தயார் செய்ய தேசியப் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் திட்டமிடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது. ஸ்டிக்கர் இல்லாத மது போத்தல்கள் சந்தையில் வெளியாகும் போக்கு காணப்படுவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக, இந்த விவகாரத்தை சரிபார்ப்பதற்கு முறையான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது .

Advertisement

Advertisement

Advertisement