• Mar 15 2025

திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி

Chithra / Mar 14th 2025, 4:01 pm
image


திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (14) செலுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு பாராளமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், 

இன்று நாட்டில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். 

குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு மீண்டும் ஒரு மாற்றம் தேவைப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்திலே, ஐக்கிய மக்கள் சக்தி திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இன்று கட்டுப்பனம் செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.



திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய மக்கள் சக்தி திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (14) செலுத்தப்பட்டது.திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு பாராளமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், இன்று நாட்டில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். குறிப்பாக மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு மீண்டும் ஒரு மாற்றம் தேவைப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்திலே, ஐக்கிய மக்கள் சக்தி திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் இன்று கட்டுப்பனம் செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement