• Apr 26 2024

தமிழ் மக்களின் இரத்தங்களை சூடாக்கி குளிர்காயும் நபர்களின் தலைவராக சம்பந்தன்..! தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ரணிலிடம் தீர்வில்லை..!samugammedia

Sharmi / Jun 10th 2023, 1:35 pm
image

Advertisement

தமிழ் மக்களின் இரத்தங்களை சூடாக்கி குளிர்காயும் நபர்களின் தலைவராக  சம்பந்தன் ஐயா காணப்படுகின்றார்.கடந்த காலம் முதற்கொண்டு தீர்வு எதிர்காலத்தில் வரும் எனவும் கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கருத்து வெளியிடுவதில் சம்பந்தன் ஐயா சிறந்தவராக காணப்படுகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்
இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு பொருளாதார ரீதியாக அதால பாதாளத்தில் விழுந்துள்ளது.  அதன் விளைவாக விலைவாசி அதிகரிப்பு , மின் கட்டண அதிகரிப்பால் மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

நூற்றுக்கு 42 சதவீதமான பிள்ளைகள் மந்தபோசனை உடையவர்களாகக்  காணப்படுகின்றனர். இதனுடன் வறுமையால் பாதிக்கப்பட்டோர் தொகையானது  60 இலட்சத்திலிருந்து  90 இலட்சத்தை கடந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மக்கள் ஒருவேளை உணவை சாப்பிடும் நிலை காணப்படுகின்றது. இதற்கு கடந்த 75 ஆண்டுகளாக தூரநோக்கற்ற ஆட்சியை முன்னெடுத்த ஆட்சியாளர்களே காரணம்

இவற்றிலும் 69 இலட்சம் வாக்குகளை பெற்று தூரநோக்கற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மக்களை மேலும் பிரச்சினைக்குள் தள்ளியுள்ளனர்.

உர கட்டுப்பாடு இரசாயன கட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்படைந்து வீதியில் இறங்கி போராடினார்கள்.கடந்த 25 வருடமாக இருக்கும் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் வேண்டுமென மக்கள் போராடினார்கள். அதன் விளைவாக ராஜபக்சாக்கள் அடித்து துரத்தப்பட்ட நிலை காணப்பட்டது.

அதன் பின் அவர்களுக்கு நன்றிக்கடன் சேவகம் செய்ய ரணில் ஆட்சிக்கு வந்தார். கடந்த தேர்தலில் ரணிலின் விருப்பு வாக்குகளை கூட எண்ண முடியாத நிலை காணப்பட்டது. அந்த வகையில் ராஜபக்சாக்களையும் அவர்களின் ஊழலையும் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கின்றார்.

2022 ம் ஆண்டு ஊடகங்களுக்கு ஆணைக்குழு அமைக்க வேண்டுமென அமைச்சரவையில் கூறப்பட்டது. அதன் பரிசீலனைக்கமைய ஒரு குழு அமைக்கப்பட்டு இன்று ஊடக ஒழுங்கமைப்பு சட்டமுலம் உருவாக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தால் பல்வேறு வாத பிரதிவாதங்கள் காணப்படுகின்றன.

ரணில் விக்கிரமசிங்கவால் கொண்டுவரப்படும் சட்டம் ஊடக அடக்குமுறையே ஆகும். மக்களின் கருத்துக்கள் , ஊடகவியளாளர்களை வேட்டையாடும் சட்டமூலமாகவே காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் இவ்வாறு நீக்கப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை கொண்டு வந்து அதன் மூலமே நீக்கமுடியுமான வரையறை காணப்பட்டது. ஆயினும் தற்போது  இச் சட்டமூலத்திற்கு அமைக்கப்பட்ட குழுவிலிருந்து நபர்களை நீக்குவதா இணைப்பதா என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியே ஆகும். தனக்கெதிராக செயற்படுபவர்களை கூண்டோடு அழிக்க முடியும் என்பது வெளிப்படையாக தெரியும் விடயம்.

இவ் ஆணைக்குழுவிற்கு ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை பரிசீலிக்கும் உரிமை உண்டு. ஆகவே அரசிற்கு எதிராகவோ ஜனாதிபதிக்கெதிரான கருத்துக்களை வெளிப்படுத்துமிடத்து இவ் ஆணைக்குழு மூலம் மீள் பரிசீலனை செய்யப்படும். இத்துடன் உரிமைப் பத்திரத்தை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டிய நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஆணைக்குழு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனமாகவே காணப்படுகின்றது. மக்களால் வெறுத்தொதுக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க மக்களை வேட்டையாடும் நபராக காணப்படுகின்றார்.

நாட்டில் எரிபொருள் , எரிவாயு போதியளவு காணப்படுகின்றது. ரணிலின் சாதனை என மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. கடந்த 40வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றில் பல்வேறு பதவிகளை வகித்து மக்களுக்கு ஒன்றையும் செய்யமுடியாத ரணில் விக்கிரமசிங்க தற்போது பிரச்சினைகள் தீர்ப்பதாக போலியான மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 2.8 மில்லியன் டொலரை திருப்பிச் செலுத்தாமல் எங்களிடம் காணப்படும் நிலையிலே அந்த பணத்தை பயன்படுத்தி இறக்குமதிகளை மேற்கொள்ள முடிகின்றதே தவிர வேறொன்றுமல்ல.

5.3 மி்ல்லியன் டொலர்  கடனாக பெற்ற பணம் வட்டி உட்பட திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. அதனை தீர்க்கவே இலாபமீட்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் , மின்சார சபை மற்றும்  நீர் வழங்கல் அதிகார சபை போன்ற மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களைத் தாரைவார்க்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவிலிருந்து  உர இறக்குமதி  உட்பட பல்வேறு ஊழல்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்த நிலையி்ல் தற்போது ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டிய நிலை அரசிற்கு காணப்படுகின்றது.  கடந்த காலங்களில் ஊடகவியளாளர்கள் தாக்கப்பட்டதைப் போன்றும் கொல்லப்பட்டதைப் போன்றும் தற்போதும் ஊடகங்களை அடக்குவதற்கான சட்டங்களை கொண்டுவரவுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினை உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாகும்.  கடந்த 30 வருட யுத்தத்தால் உயிர் , உடைமைகளை இழந்து பரிதவித்த மக்கள். யுத்தம் முடிந்து 13 வருடம் கடக்கும் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினையை பேரம் பேசும் நிகழ்ச்சியாகவும் அரசியலை தக்க வைப்பதற்கான நிகழ்ச்சியாகவாகவும் ராஜபக்சாக்களும் ரணிலும் காணப்படுகின்றார்கள்.

தமிழ் மக்களின் இரத்தங்களை சூடாக்கி குளிர்காயும் நபர்களின் தலைவராக  சம்பந்தன் ஐயா காணப்படுகின்றார். கடந்த காலம் முதற்கொண்டு தீர்வு எதிர்காலத்தில் வரும் எனவும் கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கருத்து வெளியிடுவதில் சம்பந்தன் ஐயா சிறந்தவராக காணப்படுகின்றார்.

கடந்த காலங்களில் இனக்கலவரம் போன்ற மோசமான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கிய ரணிலிடம் எந்தவிதமான தமிழர்களுக்கான தீர்வும் இல்லை. சம்பந்தன் போன்றவர்களை  தனது அதிகாரங்களை தக்கவைப்பதற்காக பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றார் எனவும் தெரிவித்தார்.


தமிழ் மக்களின் இரத்தங்களை சூடாக்கி குளிர்காயும் நபர்களின் தலைவராக சம்பந்தன். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ரணிலிடம் தீர்வில்லை.samugammedia தமிழ் மக்களின் இரத்தங்களை சூடாக்கி குளிர்காயும் நபர்களின் தலைவராக  சம்பந்தன் ஐயா காணப்படுகின்றார்.கடந்த காலம் முதற்கொண்டு தீர்வு எதிர்காலத்தில் வரும் எனவும் கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கருத்து வெளியிடுவதில் சம்பந்தன் ஐயா சிறந்தவராக காணப்படுகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடு பொருளாதார ரீதியாக அதால பாதாளத்தில் விழுந்துள்ளது.  அதன் விளைவாக விலைவாசி அதிகரிப்பு , மின் கட்டண அதிகரிப்பால் மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.நூற்றுக்கு 42 சதவீதமான பிள்ளைகள் மந்தபோசனை உடையவர்களாகக்  காணப்படுகின்றனர். இதனுடன் வறுமையால் பாதிக்கப்பட்டோர் தொகையானது  60 இலட்சத்திலிருந்து  90 இலட்சத்தை கடந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.மக்கள் ஒருவேளை உணவை சாப்பிடும் நிலை காணப்படுகின்றது. இதற்கு கடந்த 75 ஆண்டுகளாக தூரநோக்கற்ற ஆட்சியை முன்னெடுத்த ஆட்சியாளர்களே காரணம் இவற்றிலும் 69 இலட்சம் வாக்குகளை பெற்று தூரநோக்கற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மக்களை மேலும் பிரச்சினைக்குள் தள்ளியுள்ளனர்.உர கட்டுப்பாடு இரசாயன கட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்படைந்து வீதியில் இறங்கி போராடினார்கள்.கடந்த 25 வருடமாக இருக்கும் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் வேண்டுமென மக்கள் போராடினார்கள். அதன் விளைவாக ராஜபக்சாக்கள் அடித்து துரத்தப்பட்ட நிலை காணப்பட்டது.அதன் பின் அவர்களுக்கு நன்றிக்கடன் சேவகம் செய்ய ரணில் ஆட்சிக்கு வந்தார். கடந்த தேர்தலில் ரணிலின் விருப்பு வாக்குகளை கூட எண்ண முடியாத நிலை காணப்பட்டது. அந்த வகையில் ராஜபக்சாக்களையும் அவர்களின் ஊழலையும் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கின்றார்.2022 ம் ஆண்டு ஊடகங்களுக்கு ஆணைக்குழு அமைக்க வேண்டுமென அமைச்சரவையில் கூறப்பட்டது. அதன் பரிசீலனைக்கமைய ஒரு குழு அமைக்கப்பட்டு இன்று ஊடக ஒழுங்கமைப்பு சட்டமுலம் உருவாக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தால் பல்வேறு வாத பிரதிவாதங்கள் காணப்படுகின்றன.ரணில் விக்கிரமசிங்கவால் கொண்டுவரப்படும் சட்டம் ஊடக அடக்குமுறையே ஆகும். மக்களின் கருத்துக்கள் , ஊடகவியளாளர்களை வேட்டையாடும் சட்டமூலமாகவே காணப்படுகின்றது.கடந்த காலங்களில் இவ்வாறு நீக்கப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை கொண்டு வந்து அதன் மூலமே நீக்கமுடியுமான வரையறை காணப்பட்டது. ஆயினும் தற்போது  இச் சட்டமூலத்திற்கு அமைக்கப்பட்ட குழுவிலிருந்து நபர்களை நீக்குவதா இணைப்பதா என்பதை தீர்மானிப்பது ஜனாதிபதியே ஆகும். தனக்கெதிராக செயற்படுபவர்களை கூண்டோடு அழிக்க முடியும் என்பது வெளிப்படையாக தெரியும் விடயம்.இவ் ஆணைக்குழுவிற்கு ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை பரிசீலிக்கும் உரிமை உண்டு. ஆகவே அரசிற்கு எதிராகவோ ஜனாதிபதிக்கெதிரான கருத்துக்களை வெளிப்படுத்துமிடத்து இவ் ஆணைக்குழு மூலம் மீள் பரிசீலனை செய்யப்படும். இத்துடன் உரிமைப் பத்திரத்தை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டிய நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளது.ஆணைக்குழு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனமாகவே காணப்படுகின்றது. மக்களால் வெறுத்தொதுக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க மக்களை வேட்டையாடும் நபராக காணப்படுகின்றார்.நாட்டில் எரிபொருள் , எரிவாயு போதியளவு காணப்படுகின்றது. ரணிலின் சாதனை என மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. கடந்த 40வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றில் பல்வேறு பதவிகளை வகித்து மக்களுக்கு ஒன்றையும் செய்யமுடியாத ரணில் விக்கிரமசிங்க தற்போது பிரச்சினைகள் தீர்ப்பதாக போலியான மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 2.8 மில்லியன் டொலரை திருப்பிச் செலுத்தாமல் எங்களிடம் காணப்படும் நிலையிலே அந்த பணத்தை பயன்படுத்தி இறக்குமதிகளை மேற்கொள்ள முடிகின்றதே தவிர வேறொன்றுமல்ல.5.3 மி்ல்லியன் டொலர்  கடனாக பெற்ற பணம் வட்டி உட்பட திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. அதனை தீர்க்கவே இலாபமீட்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் , மின்சார சபை மற்றும்  நீர் வழங்கல் அதிகார சபை போன்ற மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களைத் தாரைவார்க்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.சீனாவிலிருந்து  உர இறக்குமதி  உட்பட பல்வேறு ஊழல்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்த நிலையி்ல் தற்போது ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டிய நிலை அரசிற்கு காணப்படுகின்றது.  கடந்த காலங்களில் ஊடகவியளாளர்கள் தாக்கப்பட்டதைப் போன்றும் கொல்லப்பட்டதைப் போன்றும் தற்போதும் ஊடகங்களை அடக்குவதற்கான சட்டங்களை கொண்டுவரவுள்ளனர்.தமிழ் மக்களின் பிரச்சினை உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாகும்.  கடந்த 30 வருட யுத்தத்தால் உயிர் , உடைமைகளை இழந்து பரிதவித்த மக்கள். யுத்தம் முடிந்து 13 வருடம் கடக்கும் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினையை பேரம் பேசும் நிகழ்ச்சியாகவும் அரசியலை தக்க வைப்பதற்கான நிகழ்ச்சியாகவாகவும் ராஜபக்சாக்களும் ரணிலும் காணப்படுகின்றார்கள்.தமிழ் மக்களின் இரத்தங்களை சூடாக்கி குளிர்காயும் நபர்களின் தலைவராக  சம்பந்தன் ஐயா காணப்படுகின்றார். கடந்த காலம் முதற்கொண்டு தீர்வு எதிர்காலத்தில் வரும் எனவும் கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கருத்து வெளியிடுவதில் சம்பந்தன் ஐயா சிறந்தவராக காணப்படுகின்றார்.கடந்த காலங்களில் இனக்கலவரம் போன்ற மோசமான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கிய ரணிலிடம் எந்தவிதமான தமிழர்களுக்கான தீர்வும் இல்லை. சம்பந்தன் போன்றவர்களை  தனது அதிகாரங்களை தக்கவைப்பதற்காக பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றார் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement