• Nov 24 2024

ஞாயிறன்று திருமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியை- புதனன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு!

Tamil nila / Jul 1st 2024, 6:42 pm
image

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் இறுதிக்கிரியைகள் அவரது சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அரச நிகழ்வாக நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கொழும்பு - பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அங்கிருந்து அவரது பூதவுடல் நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு, அங்கு வைத்து அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இறுதிக் கிரியைகளை அரச நிகழ்வாக நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டாலும் சம்பந்தன் ஐயா குடும்பத்தின் மத காலாசார முறைப்படி அது முன்னெடுக்கப்படும் என்றும், அதன் காரணமாக வழமையாக அரச நிகழ்வாக முன்னெடுக்கப்படும் இறுதி நிகழ்வுகளில் இடம்பெறும் இராணுவ மரியாதை நிகழ்வுகள் இதில் இடம்பெறா என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறன்று திருமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியை- புதனன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் இறுதிக்கிரியைகள் அவரது சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அரச நிகழ்வாக நடைபெறவுள்ளது.அதற்கு முன்னர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கொழும்பு - பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.அங்கிருந்து அவரது பூதவுடல் நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு, அங்கு வைத்து அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.இறுதிக் கிரியைகளை அரச நிகழ்வாக நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டாலும் சம்பந்தன் ஐயா குடும்பத்தின் மத காலாசார முறைப்படி அது முன்னெடுக்கப்படும் என்றும், அதன் காரணமாக வழமையாக அரச நிகழ்வாக முன்னெடுக்கப்படும் இறுதி நிகழ்வுகளில் இடம்பெறும் இராணுவ மரியாதை நிகழ்வுகள் இதில் இடம்பெறா என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement