மேற்கில் பொருளாதாரத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளானது ஆயுத கொள்வனவில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சீன அதிபர் ஜின் பிங் சி தெரிவித்திருக்கின்றார்.
நேற்றைய தினம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் முன்னரான தலைமையுரையின் போது அதிபர் ஜின் பிங் சி தெரிவித்ததாவது,
“மேற்கில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொருளாதார தடையினை விதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த தடைகள் ஆயுத கொள்வனவிற்கு வழி ஏற்படுத்துகின்றதாகவே அமைகின்றன. இன்று உலகில் முரண்பாடுகளும், போர் ஏற்படுவதற்கான சூழல்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. நாம் இதிலிருந்து விடுபட வேண்டும். உலக பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும். நமக்கு முன்பதாக பல சவால்கள் காணப்படுகின்றது. ஆயுத கலாசாரத்தையும், ஆயுத கொள்வனவு அதிகரிப்பையும் நாம் குறைக்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு முக்கியம். அதிலும் பார்க்க நாட்டின் பொருளாதாரம் சரியாமல் பாதுகாப்பது அதிக முக்கியம்”. என சீன அதிபர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை ரஷ்ய அதிபர் தனது உரையில்,
“ரஷ்யா தற்போது வேறு பாதையில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும், இதுவரை காணப்பட்ட பொருளாதார பரிமாற்றங்கள் அனைத்தும் மேற்கு நாடுகளினால் தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் சீனா மற்றும் இந்தியா உட்பட இதுவரை ரஷ்யாவுடன் பொருளாதார உறவு வைத்துக் கொள்ளாத நாடுகளுடன் தனது புதிய உறவினை கட்டியெழுப்ப உள்ளதாக” ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- வரக்காபொலயில் பொலிஸ்காரரை சரமாரியாக தாக்கிய இராணுவ அதிகாரி! (வீடியோ இணைப்பு)
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- நமது முகத்தில் உடலுறவு கொள்ளும் நுண்ணுயிரிகளுக்கு புதிய சிக்கல்! (படங்கள் இணைப்பு)
- துவிசக்கர வண்டிகளுக்கு கடன் வசதி!