• Nov 19 2024

நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற முனைப்பில் தேர்தலில் போட்டியிடவில்லை- சரவணபவன் விளக்கம்..!

Sharmi / Nov 16th 2024, 3:42 pm
image

நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற முனைப்பில் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் சுயேட்சையாக நாங்கள் போட்டியிட்டதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றையதினம்(16)  இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலில் நான் யாழ் மாவட்ட எமது மக்களுக்கு நன்றியை கூற கடமைபட்டிருக்கின்றேன். நான் சுயேட்சையில் போட்டியிட்டு எமது சின்னம் மாம்பழம் போட்டியிட்டு சுமாராக உங்களால் வாக்குகள் கொடுக்க பட்டு இருக்கின்றன.

ஒரு மாத்தில்  நாங்கள் எங்களது சின்னத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருந்தது. நேரம் காலம் போதாது இருந்தும் 7500 வாக்குகள் எங்களுக்கு போடப்பட்டு இருந்தது.

எங்களது சுயேட்சை k.v தவராசா தலைமையில் தான் இருந்தது.

நாங்கள் அந்த கட்சியை கொண்டு வர வேண்டிய காரணம் பல தடவை நான் உங்களுக்கு சொல்லி இருக்கின்றேன்.

ஒரு புறம் தேசிய கட்சியாக  தேசியம் அழிந்து கொண்டு போகின்றது  எனவே அதை தொடரப்பட வேண்டிய சூழ் நிலை இருந்தது அதன் நிமிர்த்தம் நாங்கள் அதற்கு பெயர் வைத்து கட்சி பதியாவிட்டாலும் நாங்கள் பெயர் வைத்து அதை மக்களுக்கு சொல்லி அதன் மூலம் நாங்கள் வாக்குகளை பெற்று கொண்டோம்.

இருந்தும் எங்களுக்கு வெற்றிவாகை வந்திருக்கக்கூய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம் எனினும் யாழ்ப்பாணத்தில் அலை ஒன்று அதனை கொண்டு சென்றுவிட்டது.

காலங்காலமாக வருடக்கணக்கில் அரசியலில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த அலையில் வீசப்பட்டுள்ளார்கள்.

அந்தவகையில் நானும் அதில் அகப்பட்டுக்கொண்டேன்.

நான் கடந்த இரு தடவைகள் பாராளுமன்றில் அங்கம் வகித்துள்ளேன்.

எனவே நான் மீண்டும் பாராளுமன்றம் போகவேண்டும் என்ற முனைப்பில் இதனை செய்யவில்லை.

நாங்கள் எங்களுடைய தமிழ் தேசியத்தை காப்பாற்றுவதற்கு தான் சுயேட்சையாக போட்டியிட்டோம்.

எமது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பானது காலப்போக்கில் மலரும். அதற்கு எமது மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.





நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற முனைப்பில் தேர்தலில் போட்டியிடவில்லை- சரவணபவன் விளக்கம். நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற முனைப்பில் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் சுயேட்சையாக நாங்கள் போட்டியிட்டதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.யாழில் இன்றையதினம்(16)  இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முதலில் நான் யாழ் மாவட்ட எமது மக்களுக்கு நன்றியை கூற கடமைபட்டிருக்கின்றேன். நான் சுயேட்சையில் போட்டியிட்டு எமது சின்னம் மாம்பழம் போட்டியிட்டு சுமாராக உங்களால் வாக்குகள் கொடுக்க பட்டு இருக்கின்றன.ஒரு மாதத்தில்  நாங்கள் எங்களது சின்னத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருந்தது. நேரம் காலம் போதாது இருந்தும் 7500 வாக்குகள் எங்களுக்கு போடப்பட்டு இருந்தது.எங்களது சுயேட்சை k.v தவராசா தலைமையில் தான் இருந்தது.நாங்கள் அந்த கட்சியை கொண்டு வர வேண்டிய காரணம் பல தடவை நான் உங்களுக்கு சொல்லி இருக்கின்றேன்.ஒரு புறம் தேசிய கட்சியாக  தேசியம் அழிந்து கொண்டு போகின்றது  எனவே அதை தொடரப்பட வேண்டிய சூழ் நிலை இருந்தது அதன் நிமிர்த்தம் நாங்கள் அதற்கு பெயர் வைத்து கட்சி பதியாவிட்டாலும் நாங்கள் பெயர் வைத்து அதை மக்களுக்கு சொல்லி அதன் மூலம் நாங்கள் வாக்குகளை பெற்று கொண்டோம்.இருந்தும் எங்களுக்கு வெற்றிவாகை வந்திருக்கக்கூய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம் எனினும் யாழ்ப்பாணத்தில் அலை ஒன்று அதனை கொண்டு சென்றுவிட்டது.காலங்காலமாக வருடக்கணக்கில் அரசியலில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த அலையில் வீசப்பட்டுள்ளார்கள்.அந்தவகையில் நானும் அதில் அகப்பட்டுக்கொண்டேன்.நான் கடந்த இரு தடவைகள் பாராளுமன்றில் அங்கம் வகித்துள்ளேன்.எனவே நான் மீண்டும் பாராளுமன்றம் போகவேண்டும் என்ற முனைப்பில் இதனை செய்யவில்லை.நாங்கள் எங்களுடைய தமிழ் தேசியத்தை காப்பாற்றுவதற்கு தான் சுயேட்சையாக போட்டியிட்டோம்.எமது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பானது காலப்போக்கில் மலரும். அதற்கு எமது மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement