• Sep 21 2024

நாடுமுழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், இராணுவத்தினர்! samugammedia

Chithra / May 13th 2023, 12:11 pm
image

Advertisement

நேற்று (12.05.2023) மாலை ஆறு மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடுமுழுவதும் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் ஒருகட்டமாக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட செயற்திட்டங்கள், குற்றவாளிகள், சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான விசேட சுற்றுநிரூபம் பொலிஸ்மா அதிபரால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதும் அதன் ஒருகட்டமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை என்ற பேரில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை அடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படக்கூடும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நேற்று முதல் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அடிப்படையாக கொண்டு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிவிசேட படையினர், சிறப்பு கொமாண்டோ, பொலிஸார், கலகம் தடுக்கும் குழுவினர், நீர் தாரகை வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சை மேற்கொள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதால், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது

நாடுமுழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், இராணுவத்தினர் samugammedia நேற்று (12.05.2023) மாலை ஆறு மணி தொடக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடுமுழுவதும் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இதன் ஒருகட்டமாக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட செயற்திட்டங்கள், குற்றவாளிகள், சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்கான விசேட சுற்றுநிரூபம் பொலிஸ்மா அதிபரால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதும் அதன் ஒருகட்டமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை என்ற பேரில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை அடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படக்கூடும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் நேற்று முதல் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அடிப்படையாக கொண்டு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அதிவிசேட படையினர், சிறப்பு கொமாண்டோ, பொலிஸார், கலகம் தடுக்கும் குழுவினர், நீர் தாரகை வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்கின்றன.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சை மேற்கொள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதால், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement