• Nov 17 2024

வாக்குபெட்டிக்கள் அனுப்பிவைப்பு, தேர்தல் பணிகளில் 5000அரசஊழியர்கள்- வன்னிமாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி!

Tharmini / Nov 13th 2024, 12:06 pm
image

வன்னிதேர்தல் மாவட்டத்தில் உள்ள 387வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், மற்றும் வாக்குச்சீட்டுகள்.

பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில்152 முல்லைத்தீவில் 137மன்னாரில் 98அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் ஏனைய ஆவணங்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் இருந்து இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டது. 

இதேவேளை வன்னிதேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் 306081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 

அந்தவகையில் வவுனியாவில் 128585 பேரும் முல்லைத்தீவில் 86889 பேரும் மன்னாரில் 90607 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 

தேர்தல் கடமைகளுக்காக வன்னியில் 4995 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,3898 பொலிசார் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். 

இதுவரை 107 முறைப்பாடுகள் தேர்தல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

வவுனியாமாவட்டத்தில்50 முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில்22 முறைப்பாடுகளும்,முல்லைத்தீவில்35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளது. 

இதேவேளை வவுனியாவில் சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியும், மன்னார்மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும், முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது என்றார். 

வாக்குபெட்டிக்கள் அனுப்பிவைப்பு, தேர்தல் பணிகளில் 5000அரசஊழியர்கள்- வன்னிமாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வன்னிதேர்தல் மாவட்டத்தில் உள்ள 387வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், மற்றும் வாக்குச்சீட்டுகள். பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.வவுனியாவில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில்152 முல்லைத்தீவில் 137மன்னாரில் 98அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் ஏனைய ஆவணங்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் இருந்து இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டது. இதேவேளை வன்னிதேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் 306081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில் வவுனியாவில் 128585 பேரும் முல்லைத்தீவில் 86889 பேரும் மன்னாரில் 90607 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக வன்னியில் 4995 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,3898 பொலிசார் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 107 முறைப்பாடுகள் தேர்தல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வவுனியாமாவட்டத்தில்50 முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில்22 முறைப்பாடுகளும்,முல்லைத்தீவில்35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளது. இதேவேளை வவுனியாவில் சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியும், மன்னார்மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும், முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது என்றார். 

Advertisement

Advertisement

Advertisement