• Nov 22 2024

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் திருமலையில் செயலமர்வு...!

Sharmi / Aug 10th 2024, 11:00 am
image

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் இரண்டு நாள் செயலமர்வு இன்று(10) திருகோணமலையில் உள்ள விடுதியொன்றில் ஆரம்பமானது.

இதன்போது ஆரம்ப நிகழ்வில் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

திருகோணமலை எழுத்தாணி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வடமலை ராஜ்குமார் தலைமையில் இச் செயலமர்வு இடம்பெற்றது.

இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இச் செயலமர்வில் வளவாளராக சட்டத்தரணி ஐங்கரன் பங்குபற்றி விரிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் திருமலையில் செயலமர்வு. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் இரண்டு நாள் செயலமர்வு இன்று(10) திருகோணமலையில் உள்ள விடுதியொன்றில் ஆரம்பமானது.இதன்போது ஆரம்ப நிகழ்வில் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.திருகோணமலை எழுத்தாணி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வடமலை ராஜ்குமார் தலைமையில் இச் செயலமர்வு இடம்பெற்றது.இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.இச் செயலமர்வில் வளவாளராக சட்டத்தரணி ஐங்கரன் பங்குபற்றி விரிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement