• May 07 2024

திருமணத்திற்கு முன் தவறான தொடர்புகள் இருந்தால் கடும் தண்டனை! - புதிய சட்டம் அறிமுகம்

Chithra / Dec 6th 2022, 2:57 pm
image

Advertisement

திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியான தவறான தொடர்புகளை கொண்டுள்ளவர்களுக்கு கடும் தண்டனை சட்டத்தை கொண்டு வர இந்தோனேசியா தயாராகி வருகிறது.

குற்றவியல் சட்டமாக கொண்டு வரப்படும் இந்த சட்டம் அடுத்த வாரம் இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பமுடும் என தெரியவருகிறது.

சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியான தவறான தொடர்புகளை வைத்திருப்பது மாத்திரமல்லாது திருமணமான பின்னர் அதற்கு புறம்பாக வெளியில் உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருப்பது குற்றம் என கருதப்படும்.


இது சம்பந்தமாக குற்றவாளியாக இனங்காணப்படும் நபர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்க முடியும். தவறு செய்தவர்கள் தொடர்பாக முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே இந்த தண்டனை வழங்கப்படும்.

திருமணமானவர்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை செய்யும் உரிமை கணவன் அல்லது மனைவிக்கு இருக்கின்றது. திருமணமாகாதவர்கள் தொடர்பான நபர்கள் குறித்து பெற்றோருக்கு முறைப்பாடு செய்யும் உரிமையுள்ளது.

இந்த புதிய சட்டம் இந்தோனேசியர்களுக்கு மட்டுமல்லாது அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும்.


இந்த நிலையில் இப்படியான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெளிநாட்டவர்கள் இந்தோனேசியாவுக்கு வர மாட்டார்கள் என சில அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இது இந்தோனேசியாவின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துறையிலும் பாதிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இந்தோனேசியாவில் பெறுமதிகளை பிரதிபலிக்கும் சட்ட கட்டமைப்பு இருப்பது பெருமைக்குரியது என அந்த நாட்டின் பிரதி நீதியமைச்சர் ஒமார் ஷரீப் ஹியரீஜ் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொடர்புகள் சம்பந்தமாக மட்டுமல்லாது மேலும் சில சட்டங்களை கொண்டு வர நாடாளுமன்ற தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன் தவறான தொடர்புகள் இருந்தால் கடும் தண்டனை - புதிய சட்டம் அறிமுகம் திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியான தவறான தொடர்புகளை கொண்டுள்ளவர்களுக்கு கடும் தண்டனை சட்டத்தை கொண்டு வர இந்தோனேசியா தயாராகி வருகிறது.குற்றவியல் சட்டமாக கொண்டு வரப்படும் இந்த சட்டம் அடுத்த வாரம் இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பமுடும் என தெரியவருகிறது.சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியான தவறான தொடர்புகளை வைத்திருப்பது மாத்திரமல்லாது திருமணமான பின்னர் அதற்கு புறம்பாக வெளியில் உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருப்பது குற்றம் என கருதப்படும்.இது சம்பந்தமாக குற்றவாளியாக இனங்காணப்படும் நபர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்க முடியும். தவறு செய்தவர்கள் தொடர்பாக முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே இந்த தண்டனை வழங்கப்படும்.திருமணமானவர்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை செய்யும் உரிமை கணவன் அல்லது மனைவிக்கு இருக்கின்றது. திருமணமாகாதவர்கள் தொடர்பான நபர்கள் குறித்து பெற்றோருக்கு முறைப்பாடு செய்யும் உரிமையுள்ளது.இந்த புதிய சட்டம் இந்தோனேசியர்களுக்கு மட்டுமல்லாது அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும்.இந்த நிலையில் இப்படியான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெளிநாட்டவர்கள் இந்தோனேசியாவுக்கு வர மாட்டார்கள் என சில அவதானிகள் தெரிவித்துள்ளனர்.இது இந்தோனேசியாவின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துறையிலும் பாதிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனினும் இந்தோனேசியாவில் பெறுமதிகளை பிரதிபலிக்கும் சட்ட கட்டமைப்பு இருப்பது பெருமைக்குரியது என அந்த நாட்டின் பிரதி நீதியமைச்சர் ஒமார் ஷரீப் ஹியரீஜ் தெரிவித்துள்ளார்.பாலியல் தொடர்புகள் சம்பந்தமாக மட்டுமல்லாது மேலும் சில சட்டங்களை கொண்டு வர நாடாளுமன்ற தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement