• May 12 2024

வசந்த முதலிகே - கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை!

Sharmi / Dec 6th 2022, 2:53 pm
image

Advertisement

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான  சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்,

கடுவளை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

கல்வெவ சிறிதம்ம தேரர் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போதிலும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களால் தேரரை அடையாளங்காண முடியவில்லை.

கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரஸ், கமல் விஜேசிறி உள்ளிட்ட சட்டத்தரணிகள் இன்று மன்றில் ஆஜராகினர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் 89 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 17 ஆம் திகதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த நவம்பர்  23 ஆம் திகதி கல்வெவ சிறிதம்ம தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிணை வழங்க உத்தரவிட்ட போதிலும், மற்றுமொரு வழக்கிற்கான கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த மே மாதம் இசுறுபாய கல்வி அமைச்சிற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டு அமைதியின்மையுடன் செயற்பட்டமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது  சுமத்தப்பட்டன.

எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தேரர் அடையாளங்காணப்படாததால் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோரை சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

எவ்வாறாயினும், மற்றுமொரு வழக்கு  தொடர்பில் வசந்த முதலிகே எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வசந்த முதலிகே - கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான  சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்,கடுவளை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.கல்வெவ சிறிதம்ம தேரர் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போதிலும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களால் தேரரை அடையாளங்காண முடியவில்லை.கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரஸ், கமல் விஜேசிறி உள்ளிட்ட சட்டத்தரணிகள் இன்று மன்றில் ஆஜராகினர்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் 89 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 17 ஆம் திகதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.கடந்த நவம்பர்  23 ஆம் திகதி கல்வெவ சிறிதம்ம தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிணை வழங்க உத்தரவிட்ட போதிலும், மற்றுமொரு வழக்கிற்கான கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.கடந்த மே மாதம் இசுறுபாய கல்வி அமைச்சிற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டு அமைதியின்மையுடன் செயற்பட்டமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது  சுமத்தப்பட்டன.எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தேரர் அடையாளங்காணப்படாததால் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோரை சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.எவ்வாறாயினும், மற்றுமொரு வழக்கு  தொடர்பில் வசந்த முதலிகே எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement